For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியைத் தொடர்ந்து நெல்லையிலும் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் குடோனுக்கு அதிரடி சீல்!

நெல்லையில் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் குடோன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது. நேற்று தூத்துக்குடியில் உள்ள குடோன்கள் சீல் வைக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லையிலும் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் குடோன்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான தாதுமணல் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குடோன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் நேற்று வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் இன்று தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இந்த குடோனில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட 420 டன் தாது மணல் உள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்டங்களில் தாது மணலை சட்டவிரோதமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது வைகுண்டராஜன் கும்பல்.

அதிரடி ஆய்வு

அதிரடி ஆய்வு

தூத்துக்குடி அருகே தங்கம்மாள்புரத்தில் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு சொந்தமான குடோனுக்கு மாவட்ட நிர்வாகம் நேற்று அதிரடியாக சீல் வைத்தது. இந்த குடோனில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட 25 மெட்ரிக் டன் தாது மணல் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் நடவடிக்கை

தொடர் நடவடிக்கை

தூத்துக்குடி தாலுக்காவில் முத்தையாபுரம் துறைமுகம் எக்ஸ்பிரஸ் ரோடு, முள்ளக்காடு, சிப்காட் உள்ளிட்ட இடங்களில் இயங்கிய 14 தாதுமணல் குடோன்களை திடீரென ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த குடோன்களுக்கு அதிரடியாக‘சீல்'வைத்தனர்.

கடத்தல் மினரல்ஸ்

கடத்தல் மினரல்ஸ்

இந்த குடோனில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட 420 டன் தாது மணல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தாது மணல் வெட்டி கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கபட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து நெல்லையில் உள்ள விவி மினரல்ஸ் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் அதிகாரிகள்.

ஆட்சியருக்கு மிரட்டல்

ஆட்சியருக்கு மிரட்டல்

நேற்று தூத்துக்குடியில் விவி மினரல்ஸ் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்று நெல்லையில் உள்ள குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், விவி மினரல்ஸ் குடோன்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
VV Minerals’ godown in Thirunelveli was sealed today by officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X