சிவகங்கையில் கொடூரம்: மனித தலையுடன் சாலையில் நடந்து சென்ற பூமிநாதன் கைது-அலறிஓடிய மக்கள்

சிவகங்கை: சிவகங்கை சாலையில் மனித தலையுடன் நடந்து சென்றவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகங்கை காமராஜர் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரும் புளியங்குளத்தைச் சேர்ந்த பூமிநாதனும் நுங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற நுங்கு வியாபாரத்தில் முத்துப்பாண்டி, பூமிநாதனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து பணத்தை வசூல் செய்ய பூமிநாதன் சிவகங்கை வாரச்சந்தை ரோடு அருகே உள்ள மதுக்கடையில் முத்துப்பாண்டி இருந்த முத்துப்பாண்டியிடம் பணம் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி, இருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டுள்ளனர்.,
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பூமிநாதன், தன்னிடமிருந்த நுங்கு சீவும் அரிவாளால் முத்துபாண்டியன் தலையை வெட்டினார். பட்டப்பகலில் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்பிடித்தனர்.
துண்டிக்கப்பட்ட தலை சாலையில் போய் விழுந்தது. பின்னர் அதை அந்த தலையை எடுத்து பூமிநாதன் சாலையில் நடந்து சென்றார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் தலையை வீசி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்றபோது, பூமிநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.