For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் 20 கோடி வணிகர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவர்: வைகோ

வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் 20 கோடி வணிகர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

அரவக்குறிச்சி : வெளிநாட்டுப் பெருநிறுவனமான வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் 20 கோடி சிறு குறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு செயற்குழு கூட்டம் இன்று அரவக்குறிச்சியில் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

Walmart causes damages to Small scale industries says Vaiko

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. தமிழக மக்களை ஏமாற்றவே அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

காவிரி விவகாரத்தில், சட்டசபையில் போடப்பட்ட தீர்மானம் என்ன ஆனது ? நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார். அதற்காக வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆன்லைன் வர்த்தகத்தை முன்பு எதிர்த்த அருண் ஜெட்லி, நிதியமைச்சர் ஆன பிறகு அதை ஆதரிக்கிறார். இது அவரது சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது. பெருநிறுவனமான வால்மார்ட் சில்லறை வணிகத்தில் நுழைந்தால், இந்தியாவி, 20 கோடிக்கும் அதிகமான சிறுகுறு மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Walmart causes damages to Small scale industries says Vaiko. MDMK General Secretary Vaiko says that, Central Government wont form Cauvery management board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X