For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்தவங்கள விடுங்க.. ஹாஸ்பிட்டல் இருந்து ஜெயலலிதா போன்ல பேசினாங்கன்னு அவருமா பொய் சொன்னாரு?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைந்ததற்கு போனில் பேசியதாக நெடுஞ்செழியனின் மகன் கூறியிருந்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைந்ததற்கு போனில் பேசியதாக நெடுஞ்செழியனின் மகன் கூறியிருந்தார். ஜெயலலிதா பேசக்கூடிய நிலையில் இல்லை என அப்பல்லோ மருத்துவமனையே கூறியிருந்த நிலையில் மதிவாணனிடம் பேசியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 70 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பியல், சிங்கப்பூர் டாக்டர் உள்ளிட்டோர் அவருக்கு சிகிச்சையளித்தனர்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எந்த போட்டோவும் வெளியிடப்படவில்லை.

பெரும் சந்தேகம்

பெரும் சந்தேகம்

இது பொதுமக்களிடையேயும் தமிழக அரசியல் கட்சியினரிடையேயும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. கவர்னர், ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவை பார்க்க வந்தனர்.

நோய் தொற்றால் அனுமதியில்லை

நோய் தொற்றால் அனுமதியில்லை

ஆனால் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சசிகலா மட்டுமே உடனிருந்தார். மற்றவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்பதால் யாருக்கும் அனுமதியில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

காவிரி விவகாரம் - ஆலோசனை

காவிரி விவகாரம் - ஆலோசனை

ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, காவிரி பிரச்னை தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டது. அப்படி ஜெயலலிதா யாருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவில்லையா? அதில் பங்கேற்ற அதிகாரிகளின் பெயர் என்ன. நோய் தொற்று காரணமாக ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களை அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் காவிரி விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் அனுமதித்தது எப்படி? அவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படவில்லையா என கேள்வி எழுந்தது.

ஆலோசனை நடத்தியது பொய்யா?

ஆலோசனை நடத்தியது பொய்யா?

அல்லது ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார் என கூறப்பட்டது பொய்யா என்றும் சந்தேகம் எழுந்தது. மருத்துவ அறிக்கைகளின் முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் அதிகரித்தது.

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு

இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான் மறைந்த அதிமுக மூத்தத் தலைவர் நெடுஞ்செழியனின் மனைவியும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 14ஆம் தேதி காலமானார்.

போனில் பேசினாரா ஜெ.?

போனில் பேசினாரா ஜெ.?

அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் அவரது மகனைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் என கூறப்பட்டது. இந்த தகவலை விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேசும் நிலையில் இல்லை

பேசும் நிலையில் இல்லை

அப்போது ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவுக்கு இரங்கல் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதா போயஸ் கார்டனில் மன்னார்குடி கோஷ்டியால் தாக்கப்பட்டார். அதானல் மூளைச்சாவடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என கூறப்பட்டு வருகிறது.

பொய் கூறினாரா மதிவாணன்?

பொய் கூறினாரா மதிவாணன்?

இந்நிலையில் மதிவாணன் கூறியது உண்மைதானா? அவரிடம் ஜெயலலிதா போனில் பேசினாரா? அல்லது ஜெயலலிதா பேசியதாக மதிவாணன் பொய் கூறினாரா? அப்படியானால் யாருடைய கட்டாயத்தின் பெயரில் அவர் பொய் கூறினார் என்றும் தெளிவுபடுத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் மதிவாணன் உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

{promotion-urls}

English summary
Visalatchi Nedunchezhiyan died on November 10th when jayalalitha was hospitalise.That time her son Madhivanan said that Jayalalitha was spoke to him through phone and conveyed her condolence. Now the questione is raised that was Jayalalitha spoke to him?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X