For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

கோவை நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்- வீடியோ

    கோவை: தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் கோவையில் உள்ள நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

    கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரில், தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கலப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.

    waste discharges n coimbatore waters

    இந்நிலையில் இந்த கழிவுநீர் கலப்பால், இந்த தண்ணீரை பருகும் மக்களுக்கு புற்று நோய் மற்றும் தோல் நோய்கள் வருவதால் அதிகளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவித்தனர். உடனடியாக அதிக பாதிப்புகள் வரும் நீர்நிலைகளில் முன்னதாக கழிவுகள் கொட்டுவதையும், கலப்பதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

    English summary
    Farmers petitioned to the District Collector demanding to block the mixing of water in Coimbatore. The petitioners also asked the petitioners not to take any action and to take immediate action.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X