For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே ஸ்டேஷன்ல குப்பையை போடுறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: ரயில் நிலையங்களை அசுத்தம் செய்வோருக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பயணத்தின் மூலம் ஏராளமான பயணிகள் தினமும் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில்வே நிலையங்களில் வரும் பயணிகள் ஆங்காங்கே குப்பைகளை போட்டுவிட்டுச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் பயணிகள் டீ, காபி சாப்பிடுவதும், பின்னர் அந்த டீ கப்புகளை அங்கேயே கண்ட இடத்தில் போட்டு விடுகின்றனர்.

Watch out! You may be fined Rs. 5,000 for littering

இது போல கண்ட இடத்தில் குப்பைகளை போட்டு, அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் அசுத்தம் செய்தால், ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்ட்டது. தற்போது, அது 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பான பொது நல வழக்கு ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது, அதில்,ரயில்வே ஸ்டேஷன் வளாகங்களில் அசுத்தம் செய்வர்களுக்கு ரூ.5000 வரை அபாராதம் வசூலிக்குமாறு இந்தின் ரயில்வே நிர்வாகத்திற்கு, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

English summary
The Southern Railway administration will be imposing Rs. 5,000 as penalty from passengers or who indulge in littering at railway stations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X