For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாறைகளை தாண்டி பாயும் கொள்ளிடம் தண்ணீர்.. 20 அடி ஆழத்தில் ஓட்டைகளை அடைக்க போராடும் தொழிலாளர்கள்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையே காவிரி நீர் சீறிப்பாயும் காட்சி ரம்மியமாக உள்ளது.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி திடீர் என உடைந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் 120 மீட்டர் நீளத்திற்கு இடைவெளி ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது.

இப்படி வீணாக வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்கான தற்காலிக சீரமைப்பு பணிகள் ரூ.95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உடனடியாக தொடங்கின. சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

லாரியில் கற்கள்

லாரியில் கற்கள்

அணை உடைந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றிற்குள் முதலில் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் இறங்கி வேலை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் அந்த பகுதியில் பாறாங்கற்கள் லாரி, லாரியாக கொண்டு வந்து கொட்டப்பட்டன.

வேகம்

வேகம்

உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருப்பதால் மிகவும் நீளமான சவுக்கு கம்புகள் ஆற்றுக்குள் ஊன்றப்பட்டன. பின்னர் சுமார் 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் வெளியேறி செல்லும் தண்ணீரின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தம்

கடந்த 7-ஆம் தேதி இரவு அணையில் உடைப்பு ஏற்பட்ட 120 மீட்டர் நீளத்திற்கும் பாறாங்கற்களால் ஆன தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனை பார்வையிட்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடைந்த பகுதி வழியாக தண்ணீர் வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.

நீளும் பணிகள்

நீளும் பணிகள்

மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் வழியாக நீர் கசிந்து வெளியேறுவது ஓரிரு நாளில் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டு விடும் என நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். ‘மழை விட்டாலும் தூவானம் நின்றபாடில்லை' என கிராமப்புறங்களில் சொல்லப்படும் பழமொழியை நினைவுபடுத்தும் வகையில்தான் கொள்ளிடம் அணையின் தற்காலிக சீரமைப்பு பணிகளும் முடிவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

முற்றிலும் தடுத்து நிறுத்தம்

முற்றிலும் தடுத்து நிறுத்தம்

சவுக்கு கட்டைகள், மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு வீணாக வெளியேறும் தண்ணீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு,பகலாக வேலை செய்து வந்தாலும் உடைந்த பகுதியின் வழியாக நீர் வெளியேறி செல்வதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

கசிவை நிறுத்தும் தொழிலாளர்கள்

கசிவை நிறுத்தும் தொழிலாளர்கள்

உடைப்பு ஏற்பட்ட 6-வது மதகில் இருந்து 13-வது மதகு வரை தண்ணீர் வேகமாக வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில் குறைந்த அளவிலேயே தண்ணீர் கசிந்து செல்கிறது. அந்த கசிவினை கரும்பு சக்கைகள், வாழைச்சருகுகள் மூலம் தொழிலாளர்கள் அடைத்து வருகிறார்கள்.

உயிரை பணயம் வைத்து

உயிரை பணயம் வைத்து

ஆனால் 13-வது மதகிற்கும் 14-வது மதகிற்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பாறாங்கற்களுக்கு இடையே தண்ணீர் இன்னும் அதிக அளவில் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனை அடைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.

திணறல்

திணறல்

நன்றாக நீச்சல் தெரிந்த தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 20 அடி ஆழ தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சை அடக்கி கொண்டு வெளியேறும் நீரை அடைப்பதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள். இருப்பினும் தண்ணீரை தடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

English summary
After Mukkombu Kollidam's gates are washed away by the water, PWD department stops the water flow by filling big stones, after this Cauvery river water flows very fast in between stones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X