For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கபினியில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு.. ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கபினியில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு- வீடியோ

    சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2618 கனஅடியில் இருந்து 1299 கனஅடியாக குறைந்துள்ளது. அதேநேரம், ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென் மேற்கு பருவமழை அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு குறைந்துள்ளது.

    Water level decreasing in Mettur dam

    தற்போது அணையின் நீர்மட்டம் 50.68 அடியாக உள்ளது. அதாவது நீர் இருப்பு 18.24 டிஎம்சியாக உள்ளது.

    அணையில் இருந்து 500 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது மேட்டூருக்கு நீர் வரத்து குறைய முக்கிய காரணமாகும். கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையில், தற்போது 2281 அடி நீர் உள்ளது. கபினியில் இருந்து தற்போது, வினாடிக்கு 15000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அதேநேரம், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாபயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் வனத்துறை தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22,000 கன அடி நீர் வரத்து உள்ளது.

    English summary
    Water level decreasing in Mettur dam as Cauvery catchment areas receives moderate rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X