For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனமழை எதிரொலி: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஓகி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஓகியால் கன்னியாகுமரி மாவட்டம் தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

Water level of Veeranam lake increases

புயல் காரணமாக சென்னையிலும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

47.5 அடி முழு கொள்ளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 45.6 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு 1,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 70 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The water level in Veeranam lake has increased as a result of heavy rain. 70 cubic feet water is getting released from the lake to meet Chennai's drinking water needs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X