For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாயில் தண்ணீர்: க்யூட் டூடுள் போட்ட கூகுள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளதை கூகுள் அழகான டூடுள் போட்டு கொண்டாடுகிறது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் அங்கு மனிதர்கள் வாழும் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பை கூகுள் அழகிய டூடுள் போட்டு கொண்டாடுகிறது.

இரவு நேரத்தில் வான்வெளியில் கூகுள்(GOOGLE) என்ற எழுத்துக்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று உள்ளன. அதில் இரண்டாவது ஓ என்ற எழுத்து மட்டும் செவ்வாய் கிரகத்தை குறிக்கும் வகையில் செந்நிறத்தில் உள்ளது. செவ்வாய் கிரகத்தை குறிக்கும் ஓ என்ற எழுத்து ஒரு சுற்று சுற்றி கார்டூன் முகத்தை நமக்கு காண்பிக்கிறது.

பின்னர் ஒரு கிளாஸில் இருந்து தண்ணீரை ஸ்ட்ரா மூலம் குடித்து காலியாக்கிவிட்டு மீண்டும் மறுபக்கம் திரும்பிக் கொள்கிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அந்த செயல் குறிக்கிறது.

கூகுள் என்ற வார்த்தையை கிளிக் செய்தால் தேடல் பக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

English summary
Google is celebrating NASA's victory in finding water on Mars by displaying a cute doodle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X