குடிநீருக்காக ஜேடர்பாளைம் படுகை அணையில் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளைம் படுகை அணையில் உள்ள ராஜவாய்க்காலில் குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கடந்த சில நாட்களாகவே போதிய மழை இல்லாதததால் தண்ணீர் இல்லாமல் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதே போல விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

Water opened for agriculture in Rajavaikkal

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையொட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டன. மேலும் குடிநீர் தேவைக்காக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

Water opened for agriculture in Rajavaikkal

இந்நிலையில் ஜேடர்பாளைம் படுகை அணையில் குடிநீருக்காக 90 கன அடி தண்ணீர் குடிநீருக்காக ராஜவாய்க்காலில் இன்று திறந்து விடப்பட்டது . வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கர், டிஎஸ்பி சுஜாதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத்குமார், உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர்.

இதனால் ராஜவாய்க்கால், பொய்யேரி, குமாரபாளையம் வாய்க்காலில் தொடர்ந்து 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Water opened for agriculture in Rajavaikkal in Namakkal District.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற