For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவின் மிரட்டலுக்கு அடிபணிந்தது தமிழகம்...ஆழியாறிலிருந்து நீர் திறப்பு... விவசாயிகள் ஆதங்கம்

ஆழியாறிலிருந்து கேரளாவுக்கு தமிழக அரசு நீர் திறந்து விட்டதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவின் மிரட்டலுக்கு அடிபணிந்தது தமிழகம்- வீடியோ

    கோவை: கேரளாவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஆழியாறு அணையிலிருந்து வெளியே செல்ல கூடிய அம்பான்பாளையம் ஆற்றிலிருந்து தமிழக அரசு நேற்று தண்ணீர் திறந்து வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் 56 அடிதான் நீர் மட்டம் உள்ளது. கேரள பகுதியில் உள்ள பரம்பிகுளம் அணையில் மொத்த கொள்ளளவில் 75 அடியில் 13 அடி நீர் மட்டுமே தண்ணீர் உள்ளதாக அந்த அரசு கூறியிருந்தது.

    Water opened from Aazhiyar dam to Kerala

    கேரள அரசின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆழியாறு அணையிலும் போதிய நீர் இல்லை.

    அப்படியிருக்கும்போது கேரளாவுக்கு தண்ணீர் கொடுப்பதாக இங்கு கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழக மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்துவிட்டு பின்னர் கேரள அரசுக்கு தண்ணீர் திறந்துவிட்டிருக்கலாம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இதை கண்டித்து பொதுப் பணித் துறை அலுவலகத்தை நாளை முற்றுகையிட போவதாகவும் அறிவித்தனர். மேலும் கேரளாவுக்கு நீர் திறப்பால் கோவை, திருப்பூரில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

    English summary
    TN release water from Aazhiyar Dam to Kerala. TN Farmers disappoints on this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X