For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சை: காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

Water released from Kallanai for cauveri delta cultivation

இதன் காரணமாக தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டத்தின் சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கல்லணையை அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓஎஸ் மணியன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 16 லட்சம் எக்கர் நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியிலிருந்து 4750 கன அடி நீரும் வெண்ணாறிலிருந்து 4750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயிலிருந்து 1300 கன அடி நீரும், கொள்ளிடத்திலிருந்து 1200 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

English summary
Water released from Kallanai for cauveri delta cultivation. Ministers OS Maniyan, Kamaraj, Duraikannu participated in the ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X