For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகள் அழைக்கும் குழாயடி சண்டைக்கு அதிமுக தயாராக இல்லை.. அமைச்சர் தடாலடி!

எதிர்க்கட்சிகள் அழைக்கும் குழாயடி சண்டைக்கு நாங்கள் தயாராக இல்லை என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: எதிர்க்கட்சிகள் அழைக்கும் குழாயடி சண்டைக்கு நாங்கள் தயாராக இல்லை என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆதரவின்றி யாரும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்றார். மத்தியில் ஆள நினைப்பவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் கதவை தட்டியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜின் இந்த கருத்து குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கூட்டணியை மனதில் வைத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியிருக்கலாம் என்றார்.

[ இடதுசாரி சிந்தனையாளர்கள் வீட்டுக்காவல் 4 வாரம் நீட்டிப்பு.. விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு ]

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காங்கிரஸ் கூட்டணியை மனதில் வைத்து அமைச்சர் பேசியிருக்கலாம் என்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தை ஏற்க முடியாது என்றார்.

நாங்கள் தயாராக இல்லை

நாங்கள் தயாராக இல்லை

மேலும் எதிர்க்கட்சியினர் அழைக்கும் குழாயடி சண்டைக்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.

உணர்ச்சிவசப்படுகிறோம்

உணர்ச்சிவசப்படுகிறோம்

இதைத்தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்தால் நாக்கை அறுப்போம் என அமைச்சர் துரைக்கண்ணு பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்பி உதயக்குமார், நிலையாக ஆட்சிபுரியும் எங்கள் மீது சேற்றை வாரி இறைப்பதால் உணர்ச்சி வசப்படுகிறோம் என்றார்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை எதிர்க்கட்சிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வலியுறுத்தினார்.

English summary
Minister RB Udhayakumar has said that we are not ready for the water pipe fight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X