For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்… ஈபிஎஸ் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் -வீடியோ

    கள்ளக்குறிச்சி: விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ள சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்றதாகவும், இந்த திட்டத்தால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியம் என விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.

    We do not allow plans to affect farmers Says EPS

    [39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

    இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கருமந்துறையில் தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், நிலையான ஆட்சி ஏற்பட, பிரதமராக மோடி வர துணை நிற்போம் என்றார்.

    டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்

    மேலும், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால் அவரை அதிமுக ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

    பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது கட்சி விவகாரம் என்றும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேட்பாளர்களை அதிமுக மாற்றுவதாக தெரிவித்தார்.

    English summary
    Why the supported For Prime Minister Modi?: EPS explaining the election campaign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X