For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் ஊருக்கு எதற்கு டாஸ்மாக்? கொந்தளிக்கும் கெடிலம் கிராம மக்கள் -வீடியோ

எங்கள் ஊரில் கண்டிப்பாக டாஸ்மாக் அகடையைத் திறக்கக் கூடாது; ஆண்கள் தாங்கள் சம்பாதிப்பதை டாஸ்மாக்கில் அழிப்பார்கள் என கூறி உளுந்தூர்பேட்டை கெடிலம் கிராம மக்கள் டஸ்மாக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர

By Suganthi
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுபுரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கெடிலம் என்ற ஊரில் டாஸ்மாக் கடையை புதிதாக அமைத்துள்ளார்கள். கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என ஊர்மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கெடிலம். இங்கு டாஸ்மாக் அதிகாரிகள் புதியதாக கடையை அமைத்துள்ளார்கள். ஆனால் எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை கூடவே கூடாது என பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

 We don't want Tasmac shop in our village strongly opposing kedilam people

அப்போது பேசிய பொதுமக்களில் ஒருவர், இங்கு 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லும் பிள்ளைகள் இந்த டாஸ்மாக் வழியே தான் செல்ல வேண்டும். அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது.

மேலும் எங்கள் ஊரில் விவசாயத்தைத் தவிர்த்து பெரிய தொழில் இல்லை. ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த டாஸ்மாக் கடையில் தான் கொட்டுவார்கள். இதனால் குடும்பங்கள் பாதிக்கப்படும். எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை திறக்க வரும் அதிகாரிகளை அனுமதிக்கமாட்டோம் என உறுதியாகக் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பையடுத்து, நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டனர். ஒரே இரவில் 3321 கடைகளை அகற்றியதால் அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

இதனால் அரசு, நெடுஞ்சாலைகளில் அகற்றிய கடைகளை ஊருக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. ஆகையால், கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தின் பல ஊர்களில் எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் என்னும் போராட்டம் வலுத்து வருகிறது.

English summary
We don't want Tasmac shop in our village strongly opposing kedilam people Near Ulundurpet, kedilam village people strongly opposing to establish, Tasmac shop. Tasmac officials trying to establish Tasmac in villages or town where highways Tasmac shop cleared after Supreme court's order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X