For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதெல்லாம் புதிதல்ல.. இந்தி எதிர்ப்பின் போதே பார்த்துவிட்டோம்.. ரஜினிக்கு ஸ்டாலின் அதிரடி பதில்!

மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல என்று நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல, இந்தி எதிர்ப்பின் போதே இப்படி குரல்கள் எழுந்தது என்று நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

    மத்திய அரசின் சிஏஏவிற்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக சிஏஏவை ஆதரித்துள்ளார். சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

    We have seen these statements during Protest against Hindi itself says Stalin to Rajini Kanth

    நடிகர் ரஜினிகாந்த் தனது பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப கூடாது. மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும்.

    மாணவர்கள் தவறான வழியில் செல்ல கூடாது. அப்படி செய்தால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை ஏற்படும். மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கும். அவர்களின் கல்வி பாதிக்கும். இந்தியாவில் என்பிஆர் அவசியம் தேவை., என்றார் .

    ரஜினியின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சிஏஏவின் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டது மகிழ்வளிக்கிறது.மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல.

    இந்தி எதிர்ப்பின் போது எழுந்தவையே! அப்போதைப் போலவே தற்போதைய அறப் போராட்டமும் வெல்லும்

    ஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக + கூட்டணிக் கட்சிகள் எங்கே?

    அரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா?

    English summary
    We have seen these statements during Protest against Hindi itself says Stalin to Rajini Kanth take on CAA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X