For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கி சூடு வேண்டுமென்று நடத்தவில்லை.. மக்களை அரசு பாதுகாத்தது.. அமைச்சர் செல்லூர் ராஜு அடடே

தூத்துக்குடியில் போலீஸ் வேண்டும் என்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை, கலகக்காரர்கள் உள்ளே நுழைந்த காரணத்தால் துப்பாக்கி சூடு நடந்தது, அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியது என்று தூத்துக்குடியில் இருந்து

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் போலீஸ் வேண்டும் என்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை, கலகக்காரர்கள் உள்ளே நுழைந்த காரணத்தால் துப்பாக்கி சூடு நடந்தது, அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியது என்று தூத்துக்குடியில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

We havent shot at people purposely, says Sellur Raju on Tuticorin shooting

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் இன்னும் அதிமுக அரசின் மீது கோபம் குறையாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று தூத்துக்குடி சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கியது.போராட்டக்காரர்களுக்கு 98 நாட்களாக அரசு பாதுகாப்பு அளித்தது.போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது. மக்களை சுட வேண்டும் எண்ணத்தில் தாக்கவில்லை. முதலில் வானத்தை பார்த்துதான் சுட்டோம். போராட்டம் அதிகமானதால் சுடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மக்களை போன்றுதான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என அரசும் இருக்கிறது.ஏப்.9ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.மின்சாரம், தண்ணீரை நிறுத்தி ஸ்டெர்லைட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளோம். முழு விசாரணைக்கு பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

144 தடை உத்தரவு இருந்ததால், தூத்துக்குடிக்கு வராமல் இருந்தேன். தடை உத்தரவை மீறி தூத்துக்குடி வந்த எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டத்தை மதிக்கிறது. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.பாதிக்கப்பட்ட 54 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றுள்ளார்.

English summary
We haven't shot at people purposely, says Sellur Raju on Tuticorin shooting. He met people who has affected by this worst shot order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X