For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களின் ஜனாதிபதியையும், "மெல்லிசை"யையும் தொலைத்து கண்ணீரில் மூழ்கிய ஜூலை!

Google Oneindia Tamil News

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மறைந்த ஆண்டு இது. ஜூலையில் அவரது மரணம் மக்களை, தமிழ் திரை இசை ரசிகர்களை கண்ணீர்க் கடலில் மூழ்க வைத்தது.

அதேபோல இன்னொரு மறக்க முடியாத சம்பவம்.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமை நாம் பறி கொடுத்ததும் இந்த ஜூலையில்தான்.

மேலும் இந்த ஜூலையில் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு சம்பவம் காந்தியவாதி சசி பெருமாளின் திடீர் மரணம்.

மறைந்தார் எம்.எஸ்.வி

மறைந்தார் எம்.எஸ்.வி

ஜூலை 4ம் தேதி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் 81வது வயதில் மரணமடைந்து இசை ரசிகர்களைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை

சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை

ஜூலை 4ம் தேதி, சூதாட்டப் புகார்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் 2 ஆண்டுகள் கலந்து கொள்வதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

புளூட்டோவை நெருங்கிய நியூ ஹாரிஸான்ஸ்

புளூட்டோவை நெருங்கிய நியூ ஹாரிஸான்ஸ்

ஜூலை 4ம் தேதி நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்தை நெருங்கி புதிய வரலாறு படைத்தது.

செந்தூர் பாண்டியன் மரணம்

செந்தூர் பாண்டியன் மரணம்

ஜூலை 11ம் தேதி உடல் நல பாதிப்பால் 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தூர்ப்பாண்டின் மரணமடைந்தார்.

7 தமிழருக்கு விடுதலை கிடையாது

7 தமிழருக்கு விடுதலை கிடையாது

ஜூலை 15ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளவன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என உத்தரவிட்டது.

ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல்

ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல்

ஜூலை 16ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்த கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மீண்டும் மது விலக்கு.. கருணாநிதி அறிவிப்பு

மீண்டும் மது விலக்கு.. கருணாநிதி அறிவிப்பு

ஜூலை 20ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிவிப்பின்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்தார்.

இப்ராகிம் ராவுத்தர் மரணம்

இப்ராகிம் ராவுத்தர் மரணம்

ஜூலை 22ம் தேதி திரைப்படத் தயாரிப்பாளரும், விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பருமான இப்ராகிம் ராவுத்தர் மரணமடைந்தார்.

மறைந்தார் அப்துல் கலாம்

மறைந்தார் அப்துல் கலாம்

ஜூலை 27ம் தேதி மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஷில்லாங்கில், மாணவர்களிடையே உரையாற்றியபோது திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மறைவால் ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் மூழ்கியது.

எம்எச் 370ன் சிதறல்கள்

எம்எச் 370ன் சிதறல்கள்

ஜூலை 29ம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச் 370 விமானத்தின் சிதறல் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுக்கு அருகே செயின்ட் ஆன்ட்ரே தீவின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

யாகூப் மேமனுக்குத் தூக்கு

யாகூப் மேமனுக்குத் தூக்கு

ஜூலை 30ம் தேதி 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு நாக்பூர் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சசி பெருமாள் மரணம்

சசி பெருமாள் மரணம்

ஜூலை 30ம் தேதி, - காந்தியவாதி சசி பெருமாள் மது விலக்குக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோது சர்ச்சைக்கிடமான முறையில் மரணமடைந்தது தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு எதிரான பெரும் போரைத் தூண்டி விட்டது.

English summary
Former President DR APJ Abdul Kalam, Music director MSV died this July and Gandhian Sasiperumal also met his fate this year while protesting against liquor shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X