For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம்.. அர்ஜுன் சம்பத் பேச்சு

இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

We will change Tamil anthem if come to power - Arjun Sampath

விஜயேந்திரரின் செயலுக்கு பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து நடந்த தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் முக்கிய விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் ''இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும். அதற்கு பதிலாக பாரதி, குமரகுருபரர், வள்ளலார் பாடலை பயன்படுத்துவோம்'' என்றுள்ளார்.

மேலும் ''மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கிறிஸ்துவ மிஷனரிகள் பேச்சைக் கேட்டவர். அவர் பாடலை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்'' என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

English summary
Arjun Sampath says that they will change Tamil anthem if come to power. He also added that if Hindu Makkal Katchi in power we will use Bharathiyar, Kumarakurubarar or Vallalaar song as the Tamil anthem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X