For Daily Alerts
Just In
நேரா லோக்சபாதான்... இடைத்தேர்தல்களில் போட்டியில்லை... கமல் அறிவிப்பு

தமிழக இடைத்தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை - கமல் -வீடியோ
சென்னை: மக்களவை தேர்தல்களில் போட்டியிடுவோம். ஆனால் தமிழக இடைத்தேர்தல்களில் போட்டியில்லை என்று கமல் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும், தேசிய கட்சிகளும் போட்டியிடுவது குறித்து வியூகம் வகுத்து வருகின்றன.

நாம் தமிழர் கட்சியின் சீமானும் இனி வரும் தேர்தலில் எங்கள் கொள்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டி என்று அறிவித்துவிட்டார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.
உண்மையை சொல்ல போனால் நாங்கள் இதற்கு ஏற்கெனவே தயாராக உள்ளோம். ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிட மாட்டோம்.
எனினும் அதிமுக அரசின் கடமைகளை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் பாடம் புகட்டுவோம் என்றார் கமல்.