For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3வது அணியாக மக்கள் நலனுக்கான இயக்கம்- தே.மு.தி.க., த.மா.காவுடன் பேச்சுவார்த்தை: ஜி. ராமகிருஷ்ணன்!!

By Mathi
Google Oneindia Tamil News

திருச்சி: மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான 3வது அணியாக மாறும்; இந்த அணியில் தே.மு.தி.க, த.மா.காவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வ.உ. சிதம்பரனார் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.அவரது லட்சியத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும். மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்ந்து விட்டது. வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தனியார் மயமாக்குவதை கண்டித்து கடந்த 2-ந்தேதி நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

We will emerge Thrid fron in TN: G Ramakrishnan

மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெற்றதும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் உள்பட 5 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் இந்த இயக்கம் 3-வது அணியாக மாறும். தே.மு.தி.க., த.மா.கா.வை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.

தற்போது தமிழகத்தில் நடந்து வரும் தவறுகளுக்கு தி.மு.க. - அ.தி.மு.க.தான் காரணம். மதுவிலக்கு போராட்டத்தை யாரும் கைவிடவில்லை. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

English summary
CPM State Secretary G Ramakrishnan said that, their Peoples Movement which was including 5 political parties will emerge as Third front for upcoming TN assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X