For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் - அய்யாக்கண்ணு எக்ஸ்குளூசிவ் பேட்டி

நதிநீர் இணைப்பு குறித்து 18ஆம் தேதி பேச முதல்வர் அழைத்துள்ளார். அப்போது சுமுகத் தீர்வு ஏற்படவில்லையெனில் மே 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும்நிறைவேற்ரித் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பலகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போரடடத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

 We will protest in Delhi again if our demands not fulfilled said Ayyakannu

நேற்று முதல்வரை சந்தித்து பேசிய அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாங்கள் முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். அப்போது அவர் 60 வயது கடந்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்கிறேன். வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் நகைகள் மற்றும் நிலத்தை ஏலம் விடுவதை தடுக்கிறேன்.

மேலும் கரும்புக்கு உரிய விலை தர ஏற்பாடு செய்கிறேன். கூட்டுறவு வங்கிகளில் கடன் ரத்து என்ற உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

நாங்கள் முதல்வரிடம் ஏரி,குளங்கள் தூர் வாரபப்ட வேண்டும். தடுப்பணைகள் கட்டபபட வேண்டும் என கேட்டோம். அவர் அவற்றை செய்து தருவதாக உறுதி கொடுத்துள்ளார்.

மேலும் நதிகள் இணைக்கப்பட வேண்டும் என கோரினோம். அதற்கு 18 ஆம்தேதி மீண்டும் சந்தித்து பேசலாம் என கூறியுள்ளார். 18ஆம்தேதி சுமூக தீர்வு காணப்படவில்லை எனில் 20ஆம் தேதி இந்தியா முழுவதும் இருக்கும் 300 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து, 10 லட்சம் விவசாயிகள் பிரதமர் மோடியை முற்றுகையிடுவோம் அல்லது நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

English summary
Ayyakannu gave exclusive interview to Oneindia. He told that CM Edappadi palanisamy assured to fulfill our demands. If he does not do as he promised we will conduct the protest again in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X