For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள், நம்பாதீர்கள்.. தீபா

என்னைப் பற்றி சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். மிரட்டியோ, அவதூறு பரப்பியோ என்னைப் பணிய வைக்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளார் சசிகலா. நிர்வாகிகளும், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஏற்றுக்கொண்டாலும் பெரும்பாலான தொண்டர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சசிகலா மீது அதிருப்தியாக இருக்கும் பலரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக மாறி வருகின்றனர். தீபா பேரவை தொடங்கிய கையோடு சென்னை வந்து தி. நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு திரண்டு ஆதரவாக முழக்க மிடுகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போயஸ்கார்டனாக மாறி வருகிறது தீபாவின் வீடு உள்ள பகுதி.

தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடம் ஆறுதலாக பேசி அனுப்பி வைக்கிறார் தீபா. விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என்றும் அவசரப்பட வேண்டாம் என்றும் கூறி வருகிறார் தீபா. தீபா பொட்டு வைக்காமல் இருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில் தரும் விதமாக தீபா நேற்று பேசினார்.

தீபா கண்டனம்

தீபா கண்டனம்

நேற்று தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன், கிறிஸ்தவராக மாறி விட்டேன் என செய்தி பரப்புகின்றனர். என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில் நான் அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என்று நான் பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே இப்படிசெய்தி பரப்பத் துவங்கி விட்டார்கள் என்றார்.

மதசார்பற்றவள்

மதசார்பற்றவள்

நான் டிவிட்டர் மூலம் கிருஸ்துமஸ் வாழ்த்து செய்து பதிவிட்டதும் என்னைப்பற்றி சொல்லத் துவங்கினார்கள். நான் எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா?

பொட்டு வைக்காதது குற்றமா?

பொட்டு வைக்காதது குற்றமா?

என் கணவர் ஒரு கிறிஸ்தவர் என, இவர்களாக புதிய தகவல் சொல்கின்றனர். எதையோ ஒரு கதையை சொல்லிவிட்டு அதற்கு ஆதரவாக சில விஷயங்களை பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர். நான் பொட்டு வைக்காதது பெரிய குற்றமா என்ன? ஏற்கனவே சிலர் என்னிடம் இது குறித்து சொன்னார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் நான் தீவிர கவனம் செலுத்துவதில்லை. பொட்டு வைத்தால் இந்து இல்லாவிட்டால் கிறிஸ்தவரா?என்று தீபா கேட்டார்.

என்னை அடக்க முடியாது

என்னை அடக்க முடியாது

இப்படியெல்லாம் சொல்லி ஒரு மதத்துக்குள் என்னை யாரும் அடக்க முடியாது. நான் எல்லா மதத்துக்கும் பொதுவான பெண். அத்தை மாதிரிதான் நானும். இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அனைத்து மத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் என்னை தொடர்ந்து சந்திக்கின்றனர். அவர்கள் நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

நேரத்தை வீணாக்கமாட்டேன்

நேரத்தை வீணாக்கமாட்டேன்

அரசியல் ரீதியில் நான் பலம் பெற்று விடக் கூடுமோ என்ற அச்சத்தில் சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதிலெல்லாம் கவனம் செலுத்தி அவர்களோடு மல்லுக்கட்டி நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை நான் நிறைவேற்ற மாட்டேன்.

மிரட்டி பணியவைக்க முடியாது

மிரட்டி பணியவைக்க முடியாது

இந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை தீவிரமாக ஆராய்ந்து யோசித்துதான் செய்வேன். யாருக்காவும் அவசரப்பட்டெல்லாம் எதையும் செய்ய மாட்டேன். என் குடும்ப விஷயமெல்லாம் வெளியில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை. என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக அறிகிறேன். மிரட்டியெல்லாம் யாரும் யாரையும் பணிய வைக்க முடியாது. நடப்பது நல்லவிதமாக நடந்தே தீரும் என்று கூறினார்.

பொங்கலுக்கு பின் சந்திப்பு

பொங்கலுக்கு பின் சந்திப்பு

தீபா இரண்டு நாட்களுக்கு தொண்டர்களை சந்திக்க மாட்டார் என்றும் பொங்கல் பண்டிகை முடிந்து தொண்டர்களை சந்திப்பார் என்றும் அவரது கணவர் அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிறந்தநாளில் தீபா மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

English summary
We are working towards what you want we have decided to take the journey with you said Jayalalithaa’s niece Deepa Jayakumar announces people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X