For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதற்குத்தானே காத்திருந்தோம் வருணா.. தமிழகம் முழுவதும் ஜிலுஜிலு மழை.. மக்கள் செம ஹேப்பி!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை : சாலைகளில் வெள்ளம்

    சென்னை: நேற்று இரவு தொடங்கி இன்று காலை வர தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது.

    கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், தரமணி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

    சென்னையில் ஓரளவு கனமழை பெய்திருந்தது. சென்னை காஞ்சிபுரத்தை தவிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்திருந்தது.

    EXCLUSIVE: கண்டிப்பா இருக்கு.. 7ம் தேதி வரை மழை காத்திருக்கு.. ஹேப்பி நியூஸ் தந்தார் செல்வக்குமார்! EXCLUSIVE: கண்டிப்பா இருக்கு.. 7ம் தேதி வரை மழை காத்திருக்கு.. ஹேப்பி நியூஸ் தந்தார் செல்வக்குமார்!

     திருவண்ணாமலையில்

    திருவண்ணாமலையில்

    கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் , திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்திருந்தது. கடலூர் மாவட்டத்தின் கடலூர். பொல்லாந்துரை, அண்ணாமலை நகர், வெப்பூர். லால்பேட், பரங்கி பேட்டை, புவனகிகரி. கிழசெருவை பன்ருட்டி லக்கூர், தொழுதூர் என அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் கனமழை பெய்தது.

    கனமழை பெய்தது

    கனமழை பெய்தது

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், சீர்காழி, மாயவரம், கொள்ளிடம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்திருந்தது. இதனால சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    விவசாயிகள் மகிழ்ச்சி

    விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம், கிளினூர் எரையூர், வால்தி, மணலூர்பேட்டை, தியாகதுர்க்கம், வெங்கூர், அவலூர் பேட்டை, கீழ்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நீர் ஆதாரம்

    நீர் ஆதாரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, வளிகோணம், ஆர்எஸ் மங்கலம், வட்டானம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே வைகை ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடி வரும் நிலையில் இந்த மழை பல பகுதிகளின் குடிநீர் ஆதாரத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டையிலும்

    புதுக்கோட்டையிலும்

    தஞ்சாவூர், திருவாரூர், திருத்துறைபூண்டி, பாண்டிச்சேரி, காரைக்கால், ஆடுதுறை, திருச்சி, சமயபுரம், லால்குடி, தேவி மங்கலம் மணப்பாறை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பெருங்களூர் உள்ளிட்ட காவிரி டெல்டாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்திருந்தது.

    பெரம்பலூர் பகுதியில்

    பெரம்பலூர் பகுதியில்

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பாடலூர் எரையூர் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலன பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்தது. இதனிடையே இந்த வார இறுதிவரை தமிழகம் முழுவதுல் கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    heavy rainfall in many districts of tamil nadu, heavy rain in kanchipuram, trichy, pudukottai, villupuram, cuddalore and many places of tamil nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X