For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    weather update | தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்

    சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை,சேலம் நெல்லை, தேனி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நாகை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேநேரம் வங்ககடல் மற்றும் அரபிக்கடலில உருவான மூன்று புயல்களால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை கிடைக்கவில்லை.

    weather update for tamil nadu: moderate rain may possible over 12 district of tamilndau

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 6 செ.மீ. மழைப்பொழிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

    ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை! ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை!

    English summary
    moderate rain may possible over Coimbatore, Nilgiris, Erode, Salem, Dharmapuri, Thanjavur, Thiruvarur, Nagai, Pudukkottai, Sivagangai, Ramanathapuram, Thoothukudi districts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X