For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களின் ஹீரோவாக உயர்ந்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்….

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களின் ஹீரோவாக உயர்ந்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்....

மாவட்ட ஆட்சியாளராக இருந்த போது அவர் செய்த சாதனைகள் ஏராளம். கிரானைட் மோசடியை அம்பலப்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலமான ஐ.ஏ.எஸ் அதிகாரியானர்.

தற்போது கோ.ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு லாபத்தில் செயல்பட வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் மட்டும் கோ-ஆப்டெக்ஸ் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் பார்த்திருக்கிறது. இதில் லாபம் மட்டுமே ரெண்டே கால் கோடி ரூபாய். இந்த ஆண்டு விற்பனை இலக்கு ரூ.350 கோடி; லாபம் ரூ.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நெசவாளர்களுக்கு பகிர்ந்தளித்து ஹீரோவாகிவிட்டார் சகாயம்.

நெசவாளர்களுடன் சந்திப்பு

நெசவாளர்களுடன் சந்திப்பு

கோ.ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட வாரியாக கைத்தறி நெசவாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

தேசிய அவமானம்

தேசிய அவமானம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக உள்ளதைப் பார்த்து வேதனை அடைந்த சகாயம், இதை என்னை போன்ற அதிகாரிகள் தேசிய அவமானமாக கருதுகிறோம் என்றார். பின்னர், ஒவ்வொரு நெசவாளர்களின் வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

வாழ்வாதார மேம்பாடு

வாழ்வாதார மேம்பாடு

உற்பத்தி செய்யப்படும் கைத்தறிகள், அதற்கான செலவு, விற்பனை ஆகியவற்றை நெசவாளர்களிடம் கேட்டறிந்தார் சகாயம். அப்போது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக உள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நெசவாளர்களிடம் தெரிவித்தார்.

தீபாவளி விற்பனை

தீபாவளி விற்பனை

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.121 கோடியே 2 லட்சத்துக்கு வியாபாரம் பார்த்திருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.20 கோடி அதிகம். 2011-ம் ஆண்டைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் இதற்கு காரணம் சகாயம் ஐ.ஏ.எஸ் அறிவித்த அதிரடி திட்டங்கள்தான்.

லாப இலக்கு ரூ.15 கோடி

லாப இலக்கு ரூ.15 கோடி

கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரைக்கும் ரூ.172 கோடியே முப்பது லட்சத்துக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நடந்திருக்கிறது. இன்னும் ஐந்தரை மாதங்களில் நாங்கள் எதிர்பார்க்கும் வர்த்தக இலக்கான ரூ.350 கோடியையும் லாப இலக்கான ரூ.15 கோடியையும் நிச்சயம் எட்டிவிடுவோம்.

லாபத்தில் பங்கு

லாபத்தில் பங்கு

கடந்த ஆண்டு லாபத் தொகையில் ஒரு கோடியை நெசவாளர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதற்காக இரண்டு கோடியை ஒதுக்கியது கோ.ஆப்டெக்ஸ்.

எஞ்சிய லாபத் தொகையில் பெரும் பகுதியை கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களை நவீனப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சரித்தர சேலைகள்

சரித்தர சேலைகள்

கோ-ஆப்டெக்ஸ் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சரித்திர சேலைகள், எல்லோருக்கும் பட்டு, மென்பட்டு மற்றும் பருத்திச் சேலைகள் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகம் விற்பனை ஆன சேலை ரகங்களாம்.

வேட்டி தினம்

வேட்டி தினம்

தைப் பொங்கலுக்காக குறிப்பிட்ட ஒரு நாளை 'வேட்டி தினம்' என அறிவிக்க இருக்கும் கோ-ஆப்டெக்ஸ், அதற்காக 100 விதமான வேட்டி ரகங்களையும் அறிமுகப்படுத்துகிறது.

தமிழனுடைய பாரம்பரிய உடையான வேட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வேட்டி தினத்தை அறிவிக்கிறது கோ-ஆப் டெக்ஸ்" என்று சகாயம் கூறியுள்ளார்.

சபாஷ் சகாயம்!

English summary
Wewears in the state has hailed IAS officer Sagayam for his efforts to boost the cooptex as its MD .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X