For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டியில் முதலமைச்சர் பழனிசாமிக்கு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!

ஊட்டியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊட்டியில் முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு-வீடியோ

    ஊட்டி: நீலகிரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் 122-வது மலர் கண்காட்சியை நாளை நடைபெற உள்ளது. இதனை துவக்கிவைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து கார் மூலம் இன்று ஊட்டி வந்தார்.

    Welcome to the Chief Minister in Nilgiris

    ஊட்டி வந்த முதலமைச்சர் மற்றும் அமைசர்களுக்கு நீலகிரி மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் ராஜ்ய சபா உறுப்பினருமான கே.ஆர் .அர்ஜூணன் தலைமையில் குஞ்சப்பன்னையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

    பின்னர் கோத்தகிரியில் செண்டை மேளங்கள் முழங்க கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர், இதனை தொடர்ந்து அங்கு நிறுவப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் முழு உருவ சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்தார். பின்னர் கோத்தகிரியில் இருந்து புறப்பட்ட அவர், கட்டபெட்டு பகுதியில் வரவேற்பை ஏற்று உதகையில் உள்ள தமிழகம் மாளிகைக்கு சென்றார்.

    இதனிடையே நாளை மலர் கண்காட்சிக்காக ஏற்பாடுகள் தாவரவியல் பூங்காவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கும் இந்தக் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையையொட்டி நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    English summary
    Tamil Nadu Chief Minister Edappadi Palinasamy to arrive at the 122nd flower show in Nilgiris district tomorrow. He was welcomed with enthusiasm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X