For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியின் பேச்சை விட தேர்வு முக்கியம் என சொன்ன மேற்குவங்கம்... ஆனா தமிழகம் என்ன செஞ்சது தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை விட தேர்வு முக்கியம் என்பதால் அவரின் பேச்சை ஒளிபரப்ப வேண்டாம் என்று மேற்குவங்க அரசு தடை போட்டுள்ளது, ஆனால் தமிழகமோ பிரதமரின் பேச்சை கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்தான் பழமையான மொழி, ஒப்புக்கொண்ட மோடி- வீடியோ

    சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்பதை விட தேர்வு மிகவும் முக்கியமானது என்பதால் பிரதமரின் பேச்சை ஒளிபரப்ப வேண்டாம் என்று மேற்குவங்க அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக பள்ளிக் கல்வித்துறையோ மாணவர்கள் பிரதமரின் பேச்சை கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சுற்றறிக்கை அனுப்பியது.

    பிரதமர் நரேந்திர மோடி தேர்வு தேர்வு பயத்தை வெல்வது எப்படி என்பது குறித்து இன்று மாணவர்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரையை பள்ளி, கல்லூரி மாணவர்கள் கேட்பதற்கு வழிவகை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.

    மத்திய அரசுடன் தொடர்ச்சியாக மோதல் போக்கை மேற்கொண்டு வரும் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு, தேர்வு தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை ஒளிபரப்ப வேண்டாம் என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டது. "பிரதமர் மோடியின் பேச்சை கேட்பதைவிடவும் தேர்வுக்காக தயாராவது மிகவும் முக்கியமானது" என மேற்கு வங்காள மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    பிரதமர் உரைக்கு நோ சொன்ன மேற்குவங்கம்

    பிரதமர் உரைக்கு நோ சொன்ன மேற்குவங்கம்

    அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி பள்ளி கல்லூரிகளுக்கு விடுத்த கோரிக்கையில் "மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கு தயாராவது பேச்சை கேட்பதைவிடவும் முக்கியமானது" என சுட்டிகாட்டியதா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

    காலையில் செய்யப்பட்ட ஒளிபரப்பு

    காலையில் செய்யப்பட்ட ஒளிபரப்பு

    பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்காக ஆற்றிய உரையானது இன்று காலை 11 மணி முதல் 12 மணிவரை தொலைக்காட்சி, யூடியூப் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் உரை அவசியமல்ல இப்போதைக்கு தேர்வுக்கு தயாராவது தான் அவசியம் என்று தமிழகத்தை சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    மாணவர்களுக்கு கவனச்சிதைவைத் தரும்

    மாணவர்களுக்கு கவனச்சிதைவைத் தரும்

    ஏனெனில் செய்முறை தேர்வுகள் முடிந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் பிரதமரின் உரையை கேட்பது என்பது மாணவர்களுக்கு கவனச்சிதைவை ஏற்படுத்தும் என்று ஆர்வலர்கள் கூறி இருந்தனர்.

    தமிழக அரசு கட்டாயப்படுத்துகிறது

    தமிழக அரசு கட்டாயப்படுத்துகிறது

    ஆனால் தமிழக பள்ளிக் கல்வித்துறையோ பிரதமரின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. இதற்காக பிப்ரவரி 14ம் தேதியே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுவிட்டது என்பது கூடுதல் தகவல்.

    English summary
    West bengal say no to PM Modi's live telecast whereas Tamilnadu school education department send circular to schools to watch PM speech compulsory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X