For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறிமுதல் செய்யப்படும் ஜெயலலிதாவின் 68 சொத்துகள் எவை? எவை?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் பறிமுதல் செய்யப்படவுள்ள 68 சொத்துகள் எவை எவை என்று அடையாளம் காணப்பட்டு விட்டாலும் அவை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு விட்டாலும் அவை எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், ஏனைய மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தொகையை வசூலிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 அடையாளம் காணப்பட்டது

அடையாளம் காணப்பட்டது

அதன்படி தமிழகத்தில் இவர்கள் 4 பேருக்கு சொந்தமாக உள்ள 68 சொத்துகளை தமிழக அரசால் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் அவற்றை பறிமுதல் செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 ஏராளமான சொத்துகள்

ஏராளமான சொத்துகள்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்ஆகியோருக்கு தமிழகத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்த பட்டியலிலிருந்து ஒரு சொற்பத்தைத்தான் பறிமுதல் செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 முழு விவரம் இல்லை

முழு விவரம் இல்லை

இந்த 68 சொத்துக்கள் எவை என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. அனேகமாக இவையெல்லம் சிறு சிறு சாதாரண சொத்துக்களாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

 போயஸ் தோட்டம்?

போயஸ் தோட்டம்?

அதேசமயம் போயஸ் தோட்டம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் போன்ற சொத்துக்கள் பறிமுதலாகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதனால் அவற்றை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களோ என பொதுமக்கள் கருதுகின்றனர்.

English summary
Jayalalitha including four's properties were identified. But there is no official info of what are the properties to be seized?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X