For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.ஆர்.பாலுவுக்கு முதன்மை செயலாளர் பதவியா.. திமுக தலைவர்களிடையே ஜெர்க்!

முதன்மை செயலாளராக டிஆர் பாலுவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் முதன்மை செயலாளர் பதவியை டி.ஆர். பாலுவுக்கு அளித்ததால், திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்றபின், அவர் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இந்த பதவியில் யாரை நியமிப்பது என்பதே இதற்கான காரணமாக அமைந்தது.

பாலு, வேலு, ராசா

பாலு, வேலு, ராசா

பொருளாளர் பதவியை விட உயர்ந்த பதவி முதன்மை செயலாளர் பதவி. அதனால் துரைமுருகனுக்கு இணையான ஒருவர், அல்லது அவரைவிட அனுபவம் வாய்ந்த ஒருவரே அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. எனினும், கழகத்தின் முதன்மை செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

மறைமுக எதிர்ப்பு

மறைமுக எதிர்ப்பு

இதில் அதிக வாய்ப்பு எ.வ.வேலுவுக்குத்தான் என கூறப்பட்டது. அதற்கு காரணம், மு.க.ஸ்டாலினிடமும் அவரது குடும்பத்தினரிடமும் எ.வ.வேலுவுக்கு நல்ல பெயரும் செல்வாக்கும் உள்ளதுதான். ஆனாலும் இவருக்கு கட்சிக்குள்ளேயே மறைமுக எதிர்ப்பும் இருந்து வருகிறது. எ.வ.வேலு திமுகவில் சேர்வதற்கு முன்பு அவர் அதிமுகவில் இருந்தவர். அதிமுகவில் இருந்தபோது, திமுகதான் கள்ளச்சாராயத்தை அறிமுகப்படுத்தியது என்று அவர் பேசியதை இப்போது அவருடைய எதிர்ப்பாளர்கள் திமுக தலைமைக்கு நினைவுபடுத்தி வந்தனர்.

[இந்த பதவியும் இல்லையா? மீண்டும் வாய்ப்பு வழங்காத ஸ்டாலின்.. கனிமொழி ஏமாற்றம்! ]

கட்சிக்குள் எதிர்ப்பு குழு

கட்சிக்குள் எதிர்ப்பு குழு

இதையெல்லாம் மீறிதான் வேலுவுக்கு பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் இதை செய்யவில்லை. பொறுப்பை வேலுவுக்கு கொடுத்திருந்தால் அவரது செல்வாக்கு எங்கே இன்னும் கட்சியில் அதிகரித்திருக்கும் என ஸ்டாலின் யூகித்திருக்கலாம். அல்லது துரைமுருகனை அரசியல் அனுபவம் குறைவு என்றுகூட ஸ்டாலின் நினைத்திருக்கலாம். அல்லது கட்சிக்குள் எதிர்ப்பு குழு இருக்கிறதே என்று யோசித்திருக்கலாம்.

ஏற்று கொள்ள மாட்டார்கள்

ஏற்று கொள்ள மாட்டார்கள்

அதேபோல, திமுகவில் பொதுவாகவே தலித் ஆதரவு குறைவு என்பது பரவலான குற்றச்சாடு. எனவே அதனை ஈடு செய்யும் வகையில், ராசாவுக்கு இந்த பதவியை ஸ்டாலின் கொடுத்திருந்து இருக்கலாம். ஆனால் 2ஜி விவகாரம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. ஊழல் புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராசாவுக்கு கொடுக்கவும் ஸ்டாலின் தயங்கி இருக்கலாம். அதோடு ராசாவுக்கு இந்த பொறுப்பை கொடுத்தால், கட்சிக்குள் உள்ள மற்ற மூத்த தலைவர்கள் இதனை ஏற்று கொள்ள மாட்டார்கள்.

[எதிர்பார்த்தபடியே.. திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்!]

கடுமையான உழைப்பாளி

கடுமையான உழைப்பாளி

எனவே பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகனிடம் கலந்து ஆலோசித்து கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் டி.ஆர்.பாலுவுக்கே இந்த பொறுப்பு வழங்க ஸ்டாலின் எடுத்த முடிவு மிகச்சரியானது. டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தவர். கடுமையான உழைப்பாளி. டெல்லியில் எந்தவித விவகாரங்களை பேசுவதானாலும் கருணாநிதியின் முக்கிய சாய்ஸ் டி.ஆர்.பாலுவாகத்தான் இருந்தார்.

மிகசரியான முடிவு

மிகசரியான முடிவு

அந்த வகையில் சீனியர் என்ற அடிப்படையில் ஆகட்டும், அரசியல் அனுபவம் மிக்க தலைவர் என்ற அடிப்படையில் ஆகட்டும், பொருளாளர் பதவியைவிட மேலான பதவிக்கு அலங்கரிக்க தகுதியானவர் என்ற அடிப்படையில் ஆகட்டும், டி.ஆர்.பாலுவுக்கு இந்த பொறுப்பை ஸ்டாலின் வழங்கியது மிக மிக சரியான முடிவே என்று கட்சியினர் கூறுகின்றனர்.

English summary
What are the reasons for choosing TR Balu as Chief Secretary?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X