For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டு மாற்ற போறீங்களா.. மறக்காம இதையெல்லாம் கொண்டு போகனும்.. போட்டாங்கல்ல புது 'ரூல்ஸ்'

பணத்தை மாற்ற செல்லும் நபர்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டியவை என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை வங்கிகள், அஞ்சலகங்கள் இ-கார்னர்கள் மற்றும் ஏடிஎம்களுக்கு பணத்தை மாற்றவோ டெபாசிட் செய்யவோ செல்பவர்கள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்

1. அடையாள அட்டை அவசியம்

ஆதார் கார்டு நிச்சயமாக இருக்க வேண்டும். மற்றப்படி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகிய ஏதாவது ஒரு அரசாங்க அடையாள அட்டை இருக்கனும்

2, Bank a.c

4000 ரூபாய் வரை மாற்றுபவர்களுக்கு வங்கி கணக்கு தேவையில்லை. அதேநேரத்தில் டெபாசிட் செய்ய வங்கி கணக்கு இருக்கனும்.

what are all u should have while going to change your money

3,drinking water 4bottle

தண்ணீர் பாட்டில் 4 எடுத்துட்டுப் போனீங்கன்னா கியூல நிக்கும் போது குடிச்சிக்கலாம். இதனால உங்க இடத்த வேற யாராவது பிடிக்கறத தடுக்கலாம்.

4, மதிய உணவு

கண்டிப்பா மதிய உணவு கையில கொண்டு போயிருங்க. எங்க பார்த்தாலும் கியூ ரொம்ப நீளமா இருக்கு உங்க டர்ன் வர்றதுக்கு லேட்டாகலாம். லெமன் ரைஸ், புளியோதரை வசதி. ஏன்னா குழம்பு ஊற்றும் குழப்பம் வராதுல்ல.

5,குடை

கியூ பக்கத்து தெரு வரைக்கும் போறதால குடை அவசியம் வச்சிக்குங்க இல்லன்னா பாதிப்பு உங்களுங்குதான்.

6,தரையில் விரித்து உட்கார பாய்

ரொம்ப நேரம் நின்னு கால் வலிச்சா போட்டு உட்கார பாய். தேவைன்னா அப்படியே கொஞ்ச நேரம் கண் அசரலாம்.

7.தேவையான மருந்துகள்

உங்களுக்கு சுகர், பிரஷர் எதாவது இருந்தா கண்டிப்பா மருந்து மாத்திரைகளை கையில கொண்டு போயிருங்க... நெனச்ச நேரத்துக்கெல்லாம் வரமுடியாது. தூக்கிவிட்டுரும்.

8.மொபைல் ரீ சார்ஜ் கூப்பன்

போர் அடிச்சா போன்ல பேசி பேலன்ஸ் காலி ஆயிடுச்சின்னா ரீசார்ஜ் பண்ணி பேச ரீசார்ஜ் கூப்பன் கையில இருந்தா நல்லது.

9.கொறிக்க கடலை 6 பாக்கெட்

அப்படியே கொறிக்க கடலை பாக்கெட் ஒரு 6 வாங்கி வச்சிக்கிட்டிங்கன்னா நேரம் போறது அவ்வளவு கஷ்டமா தெரியாது.

10,மொபைல் ஹெட் போன்

உங்க போன் கூட கெட்செட்டும் சேர்த்து எடுத்துக்கோங்க ஏன்னா பாட்டு, எப்.எம் கேட்டு நிக்கிற நேரத்துல போர் அடிக்காமா பாத்துக்கலாம்...

11,பவர் பேங்க்

போன்ல சார்ஜ் எவ்வளவு நேரம் இருக்கும்னு சொல்ல முடியாது அதனால கடனாவாவது ஒரு பவர் பேங்க் வச்சிக்குங்க இல்லன்னா வெறுத்துறுவிங்க..

12,மாலை நேர உணவு

ஈவ்வினிங் ஸ்னாக்ஸ் பஜ்ஜி, போண்டா, வடை அந்த மாதிரி ஏதாவது எடுத்துக்குங்க.. உடம்பு ரொம்ப முக்கியம்..

13,பிஸ்கட் 3பாக்கெட்

பிஸ்கெட் பாக்கெட் ஒரு 3 எடுத்துக்குங்க அப்பப்போ கேப்ல டையர்டு தெரியாம பாத்துக்க வசதியா இருக்கும்

14,பொறுமை

பழைய நோட்ட மாத்தப் போறீங்கன்னா எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையா இருக்கனும் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும் அப்படிங்கற மைன்ட் செட் வேனும்

15,மனதில் உறுதி வேண்டும்.

இது எல்லாத்துக்கும் மேல தலை சுற்றி கீழே வீழ்ந்தாலும்,மயக்கம் அடைந்தாலும், உயிரே போனாலும்.. நாட்டுக்காகதான், நாட்டோட நல்லதுக்காகதான் நாம நிற்கிறோம் என்ற உறுதி இருக்கனும்.

இந்த ஜோக்தாங்க இப்போ வைரலா வாட்ஸ்அப்பில் பரவுது. படிச்சித்து கோபப்பட்டா, அதுக்கு கம்பெனி பொறுப்பாகாதுங்கோ!

English summary
people who are all wants to change their old currency notes, things what are all they should have with them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X