For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சிக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா மக்களே

சென்னையிலிருந்து கோவை, மதுரை , திருச்சி ஆகியவற்றுக்கு கடுமையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிரடியாக உயர்வு... அதிருப்தியில் மக்கள்...

    சென்னை: சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி, ஆகியவற்றுக்கு கடுமையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எரிப்பொருள் உயர்வு, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டணம் உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி பேருந்து கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்சமாக ரூ.3 உள்ள கட்டணத்தை ரூ.5 ரூ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வெளியூர்களுக்கு அந்தந்த ஊரின் தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கட்டண உயர்வு

    கட்டண உயர்வு

    அதன்படி சென்னையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை பார்ப்போம். சென்னையிலிருந்து மதுரைக்கு அரசு விரைவு பேருந்து கட்டணம் ரூ.510 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ரூ. 325 ஆக வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. ரூ.185 விலைஏற்றமாகும்.

    எவ்ளோ அதிகரிப்பு

    எவ்ளோ அதிகரிப்பு

    அதேபோல் சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.365 கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. ஏற்கெனவே ரூ. 235-ஆக பெற்று வந்த நிலையில் தற்போது ரூ.130 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலுக்கு...

    நாகர்கோவிலுக்கு...

    சென்னை - ராமேஸ்வரத்துக்கு ரூ. 633-ம், சென்னை- தஞ்சாவூருக்கு ரூ.386-ம், சென்னை- கோவைக்கு ரூ.600-ம், சென்னை- சேலத்துக்கு ரூ. 380 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. மேலும் சென்னை- செங்கோட்டை, தென்காசிக்கு ரூ.470 கட்டணமும், சென்னை- நாகர்கோவிலுக்கு ரூ. 540-ம், சென்னை- நெல்லைக்கு ரூ. 660-ம் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.

    திருச்சிக்கு...

    திருச்சிக்கு...

    அதேபோல் நெல்லையிலிருந்து கோவைக்கு 335 ரூபாயும், திருச்செந்தூருக்கு 52 ரூபாயும், பாபநாசத்துக்கு 45 ரூபாயும், தென்காசிக்கு 55 ரூபாயும், மதுரைக்கு 162 ரூபாயும், திருச்சிக்கு 346 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது.

    திரும்ப பெற வலியுறுத்தல்

    திரும்ப பெற வலியுறுத்தல்

    இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை திரும்ப பெற வேண்டும் என்று மக்களும் அரசியல் கட்சியினரும் கோரியுள்ளனர்.

    English summary
    As the TN government has announced to hike the bus fare to be increased, then what will be the charges collected from Chennai to other cities like Madurai, Trichy, Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X