For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்கட்சியினரை யோசிக்க வைத்த மோடி- ஜெ சந்திப்பு : பாஜக சொல்வது என்ன?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவிடம் என்னதான் பேசினார் என்பதுதான் இன்றைய அரசியல் உலகில் பரபரப்பு. அதிமுக - பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் 60 சீட் முடிவாகியிருக்காமே? என்று ஒருவர் கேட்க இல்லை இல்லை 40 சீட்தான் என்று சிலர் சொல்ல பட்டி தொட்டியில் உள்ள டீ கடைகளில் கூட மோடி- ஜெயலலிதா சந்திப்பு பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தேடி வந்த மோடி என்று வார இதழ்களில் தலைப்பு போட்டு கதை கதையாக எழுதுகின்றனர். எதிர்கட்சியினர் வேறு மோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு குறித்து பலவித எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எல்லாம் அரசியல்

எல்லாம் அரசியல்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு ஊகங்கள் கிளம்பின. அதிமுக - பாஜக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

விடுதலையான ஜெ

விடுதலையான ஜெ

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் தமிழக பாஜக தலைவர்களோ ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே அரசியல் நடத்தி வருகின்றனர்.

ஊழலுக்கு எதிரான போர்

ஊழலுக்கு எதிரான போர்

சில தினங்களுக்கு முன்னர் மதுரை வந்த பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவும் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், ஊழலுக்கு எதிராக போரட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மதுரையில் ஆளும்கட்சிக்கு எதிராக அமித்ஷா பேசி 24 மணிநேரம் முடியும் முன்பேயே சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துப் பேசியதோடு மதிய உணவருந்தினார்.

சட்டசபை தேர்தல் கூட்டணி

சட்டசபை தேர்தல் கூட்டணி

ஜெயா- மோடி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு அமைந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

சிதம்பரம் கருத்து

சிதம்பரம் கருத்து

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பா.சிதம்பரம்,ஜெயலலிதாவை சந்திப்பதற்காகவே மோடி சென்னை வந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு மட்டுமல்லாது அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் செல்லாதது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு

இந்த நிலையில் எதிர்க் கட்சியினரின் கருத்துக்களை முற்றிலுமாக மறுத்துள்ள பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,பாஜக எப்போதும் எந்த ஒரு ஒளிவு மறைவான விசயத்தையும் செய்வதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்குத்தான் அது அத்துப்படி என கருத்து தெரிவித்துள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பில் எந்த ஒரு அரசியல் காரணமும் இல்லை என கூறிய வெங்கையா நாயுடு,மரியாதை நிமிர்த்தமாகவே இருவரும் சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

பேசியது என்ன?

பேசியது என்ன?

எது எப்படியே பிரதமர் மோடியின் தமிழக பயணம், அரசியல் வானில் பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. இந்த சந்திப்பு நட்பு ரீதியானதுதானா? அரசியல் ரீதியானதா? என்பது சட்டசபை தேர்தல் நெருங்கும் போது தெரியவரும்.

English summary
Opposition parties are worried over the meeting of PM Modi and CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X