For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ, மமதா, அஸ்ஸாம் முதல்வர் சோனோவால்: ஒற்றுமை என்ன?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில முதல்வர்கள் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து ஜெயலலிதா நாளை மீண்டும் முதல்வர் ஆகிறார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி ஆகியோர் மீண்டும் முதல்வர்களாக பதவியேற்கிறார்கள். அஸ்ஸாமில் பாஜக தலைவர் சர்பானந்த சோனோவால் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஒற்றுமை

ஒற்றுமை

முதல்வராக மீண்டும் பதவியேற்கும் ஜெயலலிதா, தீதி என்று அழைக்கப்படும் மமதா மற்றும் அஸ்ஸாம் மாநில முதல்வர் ஆகும் சோனோவால் ஆகியோரிடையே ஒரு ஒற்றுமை உள்ளது. மூன்று பேருமே திருமணமாகாதவர்கள்.

ராகுலும்

ராகுலும்

அஸ்ஸாம், தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர்கள் மட்டும் அல்ல காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் இன்னும் திருமணம்
செய்துகொள்ளவில்லை.

தவ வாழ்வு

தவ வாழ்வு

மக்களுக்காகவே நான், மக்களால் நான். எனக்கென தனியாக குடும்பம் கிடையாது. தமிழக மக்களாகிய நீங்கள் தான் என் குடும்பம். நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன் என ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu CM Jaya, West Bengal CM Mamata Banerjee and Assam's to be CM Sarbananda Sonowal have one thing in common.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X