For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதானா சார் உங்க டக்கு... இப்ப 20 ரூபாய் நோட்டை புடிச்சி என்ன செய்ய போறீங்க?

ஆர்.கே.நகர் அதகள நகராகி வருகிறது. 20 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு ஆள் ஆளுக்கு பணம் 10000 வந்துச்சா என்று கேட்கின்றனர். இப்போது போலீசார் 20 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு...வீடியோ

    சென்னை: ஆர்.கே நகரில் ரூ.20 நோட்டு விவகாரத்தில் 450 பேருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆர்.கே நகரில் ஓட்டுக்கு பணம் கேட்டவர்களை டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.

    ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    20 ரூபாய் நோட்டுக்களை நம்பி ஓட்டுப்போட்டவர்களுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அல்வா கொடுத்து விட்டனர் என்றே கூறப்படுகிறது.

    20 ரூபாய் டோக்கன்

    20 ரூபாய் டோக்கன்

    வாக்குப்பதிவு நாளான 21 ஆம் தேதியன்றே, கையில் நம்பர் எழுதப்பட்ட 20 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு புகார் கூறினார். அப்போதே போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலும் முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்.

    டோக்கன் தரவில்லை

    டோக்கன் தரவில்லை

    கடன் சொல்லி வாக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று தினகரன் கூறினாலும், பணவிநியோகம் செய்யவில்லை என்றும், டோக்கன் தரவில்லை என்றும் கூறினார். ஆனால் நடக்கும் சம்பவங்களோ டிடிவி தினகரனுக்கு எதிரானதாகவே இருக்கிறது.

    பணம் கேட்கும் வாக்காளர்கள்

    பணம் கேட்கும் வாக்காளர்கள்

    ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், 20 ரூபாய் நோட்டை டோக்கன்களாக வழங்கியதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்ததையடுத்து, டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள மக்கள் டோக்கன் வழங்கிய 6 பேரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    450 நோட்டுக்கள்

    450 நோட்டுக்கள்

    அங்கு வந்த தண்டையார்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர், அங்கிருந்தவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 450 பேருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அத்தனையும் பொய்யா?

    அத்தனையும் பொய்யா?

    20 ரூபாய் நோட்டுக்களை நம்பி ஓட்டுப்போட்டவர்களுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அல்வா கொடுத்து விட்டனர் என்றே கூறப்படுகிறது. தினகரன் 150 கோடி ரூபாயை களத்தில் இறக்கியுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் இப்போதோ வெறும் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஓட்டுக்களை ஆட்டையை போட்டு விட்டனர். அதோடு பணத்தையும் ஆட்டையை போட்டு விட்டனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

    இப்போ கைப்பற்றியது ஏன்?

    20 ரூபாய் நோட்டுக்கள் பற்றிய தகவல் வெளியான உடனேயே போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இப்போது கைப்பற்றி நடவடிக்கை எடுக்கின்றனர். இதுதானா சார் உங்க டக்கு என்று கேட்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

    English summary
    In RK Nagar, the EC officials and Police teams are searching for the marked Rs 20 notes among the voters to stop the cash distribution by the Dinakaran group. But people wonder what is the use in this delayed action as the by poll is over now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X