For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீப் சவுண்ட் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்.. சென்னை போலீசை ஸ்டன்னாக்கிய யூடியூப் கேள்வி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பீப் ஒலிக்குள் மறைக்கப்பட்டுள்ளது என்ன வார்த்தை என்று யூடியூப் சார்பில் சென்னை போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், விளக்கம் கொடுத்த பிறகும் பாடல் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது.

யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட பீப் பாடல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமனறத்தில் சிம்பு கோரிய முன் ஜாமீன் அளிக்கப்படாததால், அம்மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீப் பாடல் சர்ச்சையில் தொடர்புடைய சிம்பு, அனிருத் இருவரும் ஜனவரி 5ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

யூடியூப்பிடம் கோரிக்கை

யூடியூப்பிடம் கோரிக்கை

வெகுஜன மக்களுக்கு சென்று சேர்ந்துவிட கூடாது என்பதால், இணையதளத்தில் இருந்து பீப் பாடலை அகற்றுமாறு யூ டியுப் நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

தர்மசங்கட கேள்வி

தர்மசங்கட கேள்வி

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் கோரிக்கையை பரிசீலித்த யூடியூப் நிர்வாகம், பீப் ஒலி போடப்பட்டுள்ள இடத்தில் வருவது என்ன வார்த்தை என விளக்கம் கேட்டது. அதனை எப்படி விளக்க என்று தெரியாமல், கொஞ்சம் சங்கடப்பட்டோம். இருப்பினும் அந்த வார்த்தையை கூறினோம்.

நீக்கவில்லை

நீக்கவில்லை

தமிழ் சமூக சூழ்நிலையில் அந்த வார்த்தை மிகவும் மோசமானது என கூறினோம். ஆயினும் யூடியூப் இதுவரை அப்பாடலை நீக்கவில்லை. இருமுறை கடிதம் எழுதியும், இன்னும் பலன் கிடைக்கவில்லை.

அதெல்லாம் சகஜமப்பா

அதெல்லாம் சகஜமப்பா

நாங்கள் கூறிய அந்த கெட்டவார்த்தை போன்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் மிக சகஜம் என்பதால் எங்களது கோரிக்கைக்கு இதுவரை யூடியுப் தரப்பில் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்று தெரிகிறது. தமிழ் பண்பாட்டு வீச்சை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை" என்றார்.

பதிவேற்றியவரும் தெரியவில்லை

பதிவேற்றியவரும் தெரியவில்லை

மற்றொரு அதிகாரி கூறுகையில், டிசம்பர் 11ம் தேதி யூடியூப்பில் அந்த பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த ஐ.பி. அட்ரசில் இருந்து இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று யூடியூப்பிடம் விளக்கம் கேட்டதற்கும், இன்னும் பதில் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் பதிவேற்றமாகியிருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என்றார்.

English summary
Chennai police, seeking removal of the 'beep' song are in a stun after YouTube does not seem to be convinced about the 'bad words' behind the 'beeps'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X