For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!

சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீர்ப்பின் மூலம் சசிகலாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது- வீடியோ

    சென்னை: இருந்த கடைசி நம்பிக்கையும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் சசிகலாவை விட்டு சென்று விட்டது.

    ஜெயலலிதா இறந்ததிலிருந்தே சசிகலாவிற்கு சோதனை மேல் சோதனை. எதிர்பார்த்தது ஒன்று.. நடந்து முடிந்தது வேறொன்றாகி.. இறுதியில் சொத்துக் குவிப்பு வழக்குக்காக சிறைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் அவரது சார்பாக டிடிவி தினகரன் இழுத்து பிடித்து அமமுகவை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்.

    மொத்தம் சறுக்கலே

    மொத்தம் சறுக்கலே

    இக்கட்டான, முக்கியமான, நெருக்கடியான நிலைமை ஏற்படும்போதெல்லாம் பெங்களூரு சென்று சசிகலாவுடன் ஆலோசனையும் நடத்தி வந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மறைந்து அமமுகவுக்கு ஒரே ஒரு சாதகமாக அமைந்தது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு மட்டுமே. அதன்பிறகு எல்லாமே சறுக்கல். கருணாநிதி இறந்து நாடே சோகத்தில் மூழ்கியிருந்தபோது, முதல் ஆளாக, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சென்று களப்பணியில் தீவிரமாக இறங்கியது தினகரன் மட்டுமே.

    கோர்ட்டுக்கு போகிறேன்

    கோர்ட்டுக்கு போகிறேன்

    இதற்காக தம் கட்சி சார்பாக ஒருசிலரை அந்தந்த தொகுதிகளிலும் முகாமிட செய்து வேலை பார்க்க வைத்தார். ஆனால் ரெட் அலர்ட் எனும் அரசியல் எல்லா தேர்தல் ஏற்பாடுகளையும் மழைநீரில் அடித்து செல்ல வைத்தது. இடைத்தேர்தல்களும் தள்ளி போனது. இதனால் மிகுந்த வருத்தமும், ஆத்திரமும் அடைந்த டிடிவி, இது சம்பந்தமாக கோர்ட்டுக்கு போக போகிறேன் என்று கூட சொன்னார்.

    தங்க.தமிழ்ச்செல்வன்

    தங்க.தமிழ்ச்செல்வன்

    அதேபோல 18 எம்எல்ஏக்களும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிசலாவை நம்பிதான் இருந்து வருகிறார்கள். எத்தனையோ முறை சசிகலாவை சிறை சென்று பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் டிடிவி அவர்களை அழைத்து செல்லவே இல்லை. தங்க.தமிழ்செல்வனுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

    பரோலில் இளவரசி

    பரோலில் இளவரசி

    இழுபறியாகவே நீடித்து வந்த இந்த தீர்ப்பு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் டிடிவி பெங்களூர் சென்று ஆலோசனையும் பெற்று, ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்து குற்றாலத்திலும் தங்க வைத்தார். இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று சசிகலா, தினகரன் தரப்பு அதிகமாகவே நம்பியதாம். அதற்காகத்தான் இளவரசி பரோலுக்கு ஏற்பாடு நடந்தது.

    உற்சாகம், நம்பிக்கை

    உற்சாகம், நம்பிக்கை

    தீர்ப்பு சாதகமாக வரும்போது யாராவது ஒருவர் கூட இருக்க வேண்டும் என்றும், அப்படி சாதகமாக வரும்பட்சத்தில் நம் தரப்பு ஆட்களை ஆளும் கட்சி இழுத்து வளைத்து போட்டு கொள்ளவும் வாய்ப்பு இருப்பதால், ஒருவர் வெளியே இருக்க வேண்டும், அப்போதுதான் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் வரும் என்று கருதப்பட்டது.

    காதுவலி ஆபரேஷன்

    காதுவலி ஆபரேஷன்

    அதன் அடிப்படையில்தான் இளவரசிக்கு பரோல் நடவடிக்கையும் ஆரம்பமானது. அதனடிப்படையில் இளவரசிக்கு காது வலிக்கு ஆபரேஷன் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை தீர்ப்பு சம்பந்தமாக சசிலா, தினரகன் தரப்பினர் நம்பிக்கையுடன்தான் இருந்தனர். ஆனால் தற்போது பாதகமான தீர்ப்பினை அடுத்து அமமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

    எம்எல்ஏக்கள் நிலை?

    எம்எல்ஏக்கள் நிலை?

    பரோலில் வரும் இளவரசி ஆதரவு எம்எல்ஏக்களிடம் என்ன பேச போகிறார், எப்படி நம்பிக்கை அளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தொடர் சறுக்கலால் 18 எம்எல்ஏக்களும் இனியும் அமமுகவில் தொடர்வார்களா? என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.

    English summary
    What's the next step of Sasikala?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X