For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை சாந்தோம் சாலையில் அதிமுக பேனர்கள்... தலைமை நீதிபதி அதிருப்தி

சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அதிமுக பேனர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இவ்வளவு பேனர்கள் தேவையா | கிராண்ட் மாஸ்டரான சென்னை பையன்

    சென்னை: சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அதிமுக பேனர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுக்க சில நாட்களுக்கு முன்பு, உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கட் அவுட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    What TN government has done against Banner culture in Chennai asks Madras HC Chief Justice

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்பின் பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்த தடை கிடையாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆனாலும் கட் அவுட் வைக்க சில கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அதிமுக பேனர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரில் வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடிவதில்லை.

    சாலை ஓரத்தில் அனுமதி இன்றி கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    What TN government has done against Banner culture in Chennai asks Madras HC Chief Justice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X