For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எத்தனை பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி?

ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தை குற்றவாளி என்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹாசினி கொலை வழக்கு..நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த்- வீடியோ

    செங்கல்பட்டு : ஹாசினியை படுகொலை செய்த வழக்கில் தஷ்வந்த் மீது கொலை , ஆள்கடத்தல், தடயத்தை மறைக்க முயற்சித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

    போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.

    What type of sections are filed on Dhaswant?

    தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி காலை முதலே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கூட்டம் கூடியது. 12 மணியளவில் தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மதியம் 3 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் மதியம் 3 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அப்போது தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று அறிவித்தார். அவர் மீது கொலை , ஆள் கடத்தல் , தடயங்களை மறைக்க முயற்சித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

    சி.ஆர்.பி.சி 201, 202, 354, 363, 366 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. குழந்தைக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 35 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தஷ்வந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    Chengalpet Magila Court announces Dhaswant as accused in Hasini Murder case. All the accusations are proved, says Judge Velmurugan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X