For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகன்னா அமளி துமளி நடப்பதும்.. அமாவாசைன்னா ஆளுநர் வருவதும் சகஜம்தானேப்பா!

ஆளுநர் வருகிறார் என்றாலே பலர் ஆடித்தான் போகிறார்கள். என்ன நடக்கப் போகிறதோ என்றே ஆள் ஆளுக்கு கேட்கின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அமாவாசையும், அதிமுகவும்-வீடியோ

    சென்னை: ஆவணி அமாவாசையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆளுநர் வந்து ஒ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். மகாளய அமாவாசை தினமான இன்றும் ஆளுநர் சென்னைக்கு வந்துள்ளார் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அமாவாசை வந்தாலே அதிமுகவினர் ஆடித்தான் போவார்கள் காரணம் டிசைன் அப்படி. கடந்த 2011 - 2016 அதிமுக ஆட்சி காலத்தில் அமாவாசை வரப்போகிறது என்றாலே அமைச்சரவையில் யார் தலையாவது உருளும்.

    ஜெயலலிதா அமைச்சரவையில் அமாவாசை, பவுர்ணமியை ஒட்டியே மாற்றங்கள் இருக்கும். இப்போதோ ஆளுநர் வருகையும் அமாவாசையை ஒட்டியை நடக்கிறது.

    அதிமுக இணைப்பும் பதவியேற்பும்

    அதிமுக இணைப்பும் பதவியேற்பும்

    கடந்த ஆவணி மாத அமாவாசையில் பிளவு பட்டிருந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. இதனையடுத்து அன்றைய தினமே துணை முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். மாஃபா பாண்டியராஜனும் அமைச்சராக பதவியேற்றார்.

    அமளி துமளிதான்

    அமளி துமளிதான்

    அணிகள் இணைந்தது முதலே அதிமுகவில் ஒரே அமளி துமளிதான். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். நம்பிக்கையில்லை என்று கூறி 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

    ரிசார்ட்ஸ் வாசம்

    ரிசார்ட்ஸ் வாசம்

    புதுச்சேரி ரிசார்ட்ஸ்சில் குடியேறிய அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் தினசரியும் எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ்க்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர். இதனால் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால்.

    ஜம்ப் ஆன ஜக்கையன்

    ஜம்ப் ஆன ஜக்கையன்

    டிடிவி தினகரன் கேம்ப்பில் இருந்த ஜக்கையன் எம்எல்ஏ திடீரென டிடிவி தினகரன் அணிக்கு ஜம்ப் ஆனார். அதே நேரத்தில் கருணாஸ் உள்ளிட்ட மேலும் 2 எம்எல்ஏக்களை தனது ஆதரவாளர்களாக மாற்றினார் டிடிவி தினகரன்.

    18 பேரும் டிஸ்மிஸ்

    18 பேரும் டிஸ்மிஸ்

    நோட்டீஸ்க்கு விளக்கம் தராத எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து அதை உடனடியாக அரசிதழில் வெளியிட செய்தார் சபாநாயகர் தனபால். இதனால் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    ஆளுநர் எங்கேப்பா?

    ஆளுநர் எங்கேப்பா?

    தமிழகத்தில் இத்தனை களேபரம் நடக்க பொறுப்பு ஆளுநரோ பொறுப்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.

    அமாவாசை

    அமாவாசை

    அமாவாசை வந்து விட்டது ஆளுநரும் இன்று சென்னைக்கு வந்து விட்டார். இன்றைக்கு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு புதன்கிழமை வரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    யாருக்கு சாதகம்

    யாருக்கு சாதகம்

    ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கே சாதகமாக அமையும் என்கின்றனர். ஆனால் அப்படி ஜெயிக்கத்தான் எதிர்கட்சியினர் விட்டுவிடுவார்களா? திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் என்ன ட்விட்ஸ் வைக்கப் போகிறார்களோ?.

    English summary
    ADMK Party problems link with Amavasya.Today is Mahalaya Amavasya and the interim governor Vidyasagara Rao is arriving in Chennai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X