For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு ஜெயலலிதா குறித்து என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது?

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களால் நான்! மக்களுக்காக நான்!- வீடியோ

    -ஆர். மணி

    சென்னை: 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக வை வீழ்த்த ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெ. அதில், மறைந்த ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா), காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் பாமக இருந்தன. அஇஅதிமுக 130 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் ஜெயலலிதா நிற்க முடியவில்லை. காரணம், டான்சி மற்றும் கொடைக் கானல் ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டதால் ஜெ வால் தேர்தலில் நிற்க முடியவில்லை.

    ஆனால் அதன் காரணமாகத்தான் தன்னால் தேர்தலில் நிற்க முடியவில்லை என்ற கருத்தோட்டம் மக்கள் மனதில் இருக்க கூடாது என்பதற்காக, 4 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. 2 தொகுதிகளுக்கு மேல் யாராவது தேர்தலில் நிற்க மனு செய்திருந்தால், அவரது அனைத்து மனுக்களும் தள்ளுபடியாவதுடன், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு சம்மந்தப்பட்டவர் எந்த தேர்தலிலும் நிற்க முடியாது என்ற சட்டத்தை பற்றியும் கவலைப்படாமல் ஜெ 4 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அவரது 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    மே 13, 2001ல் தேர்தல் முடிவுகள் வந்தன. அஇஅதிமுக 130 க்கும் மேற்பட்ட எம்எல்ஏ க்களை பெற்று தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியாக உருவெடுத்தது. அடுத்த நாள், மே 14 ம் தேதி காலை 11 மணிக்கு அஇஅதிமுக தலைமை கழுகத்தில் அனைத்து அஇஅதிமுக எம்எல்ஏ க்களும் கூடி ஜெயலலிதாவை தங்களது சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். அன்று மாலையிலேயே ஜெ முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இதனை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது எம்எல்ஏ வாக நிற்க தகுதி இல்லாதவர் எப்படி முதலமைச்சராக முடியும் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, எம்எல்ஏ வாக நிற்க தகுதியில்லாதவர் முதலமைச்சராக முடியாது என்று செப்டம்பர் 21, 2001 ல் தீர்ப்பளித்தது. பின்னர் டிசம்பர், 2001 ல் சென்னை உயர்நீதிமன்றம் ஜெ வுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பளித்தது. 2002 பிப்ரவரியில் தேர்தலில் நின்று ஜெ வெற்றி பெற்றார். 2002 மார்ச் மாதத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஜெ.

    2002 டூ 2006 ஜெ. ஆட்சி

    2002 டூ 2006 ஜெ. ஆட்சி

    2002 - 2006 ஆட்சிக் காலம் ஜெ வின் 1991 - 1996 ஆட்சி காலத்தை விட மோசமாக இருந்தது. கொடுக்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்ட்டதை எதிர்த்து 2002 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதில் ஒன்றரை லட்சம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. இவ்வாறு டிஸ்மிஸ் ஆனவர்களில் 55 ஊழியர்கள் அடுத்தடுத்த மாதங்களில் மாரடைப்பால் மாண்டு போயினர். டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்கள் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், இந்த ஒன்றரை லட்சம் ஊழியர்களில் 6,000 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த உத்திரவிட்டது. அந்த 6,000 ஊழியர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் 900 ஊழியர்களை தவிர மற்றவர்களை பணியில் அமர்த்த உத்திரவிட்டது. ஆனால் நல்ல வேலையாக 2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வந்த வேளையில் இந்த 900 ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க ஜெயலலிதா உத்திரவிட்டார். மொத்தத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தங்களது அரசாங்க வேலையில் மீண்டும் வந்து அமர்ந்தனர். மதமாற்ற தடை சட்டம், ஆடு, மாடு கோழிகளை காணிக்கையாக கோயில்களில் பலி க்கு வெட்டிக் கொல்லப்படுவதற்கு தடை விதித்தார்.

    2006ல் தோற்ற ஜெயலலிதா

    2006ல் தோற்ற ஜெயலலிதா

    2006 தேர்தலில் ஜெ தோற்றுப் போனார். 60 இடங்களை வென்று எதிர்கட்சி தலைவரானார். திமுக 96 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. 36 காங்கிரஸ் எம்எல்ஏ க்களும், 18 பாமக எம்எல்ஏ க்களும் திமுக வை ஆதரித்தனர். ஆனால் அமைச்சரவையில் திமுக வினர் மட்டுமே இருந்தனர். காங்கிரஸ் மற்றும் பாமக வெளியிலிருந்து திமுக வுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி திமுக அரசு என்று தான் ஜெ சொல்லுவார். 2004 மக்களவை தேர்தல்களில் பாஜக வுடன் கூட்டணி அமைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வினார் ஜெயலலிதா. அனைத்து 40 தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்றது. ஆனால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரிகளுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் 9 எம் பி சீட்டுகளை கைப்பற்றினார் ஜெயலலிதா.

    தேமுதிக உதவியால்

    தேமுதிக உதவியால்

    2011 சட்டமன்ற தேர்தலில் இடது சாரிகள் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2014 ல் ஊழல் வழக்கில் பெங்களுருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பனஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலையானார். 2015 மே மாதம் கர்நாடக உயர்நீதி மன்றம் அவரை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்தது. மீண்டும் தேர்தலில் நின்று முதலமைச்சர் ஆனார். நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டுகளில், இந்தியா வில் எந்த ஒரு அரசியல் வாதியும், எந்த ஒரு முதலமைச்சரும் சந்திக்காத வழக்குகளை ஜெயலலிதா சந்தித்தார். 1993 லிருந்து 2016 வரையில் கிட்டத்தட்ட அவர் மீது போடப்பட்ட 12 க்கும் மேற்பட்ட வழக்குகளில் நிரபராதி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு விடுதலை ஆனார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து மட்டும், அவரால் அவர் உயிருடன் இருக்கும் வரையில் தப்ப முடியவில்லை. அவர் இறந்த பிறகு இந்தாண்டு உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 14 ம் தேதி வழங்கிய தீர்ப்பு, ஜெவுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரையும் நான்காண்டுகளுக்கு சிறை தண்டனை கொடுத்து அம் மூவரையும் பரப்பனஹாரா சிறையில் அடைத்து விட்டது.

    ஜெ. பணத்தில் வாழ்ந்த வக்கீல்கள்

    ஜெ. பணத்தில் வாழ்ந்த வக்கீல்கள்

    1993 லிருந்து 2016 வரையில் வழக்கறிஞர்களுக்காக ஜெயலலிதா செலவழித்த தொகை குறைந்தது 100 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் குறைந்தது 80% சதவிகிதத்தினர் ஜெயலலிதாவுக்காக 1993 லிருந்து 2016 வரையில் ஏதாவது ஒரு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ வாதாடியிருக்கின்றனர். கே.கே. வேணுகோபால், கே.பராசரன், ராம்ஜெத்மலானி, கபில் சிபல், அருண் ஜெட்லி, ரவி ஷங்கர் பிரசாத், சித்தார்த்த ஷங்கர் ரே, முகுல் ரோத்தகி, ஃபாலி நாரிமன், ஜி.ராமசாமி உள்ளிட்ட பல முன்னணி வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கின்றனர். 2014 மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் எந்த கூட்டணி கட்சிகளும் இல்லாமல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் ஜெ. 2016 சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் அமைக்காமல் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஆனால் பதவியேற்று ஏழு மாதங்கள் கூட முடிவடையாத காலகட்டத்தில், டிசம்பர், 5, 2016 ல் இறந்து போனார். செப்டம்பர் 21, 2016 ல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்று மாண்டு போனார்.

    மீண்டும் 2011ல் வெற்றி

    மீண்டும் 2011ல் வெற்றி

    ஜெ வின் அரசியல் வாழ்வில் 2011 சட்டமன்ற வெற்றி முக்கியமானது. காரணம், முதலமைச்சரானவுடன் தமிழ் தேசீயவாதிகள் பேசும் மொழிகளை ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். பதவியேற்ற உடனேயே வந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இரண்டு முறை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2014 பிப்ரவரியில், மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முந்தய கால கட்டம் அது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேரையும் மாநில அரசு விடுதலை செய்யப் போவதாகவும், இதற்கு உரிய பதிலை தர மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் கெடு விதித்தும் தீர்மானம் நிறைவேற்றினார். வாக்காளர்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதில் ஜெ புதிய சாதனைகளை படைத்தார். மிக்சி, கிரைண்டர், பெண்களுக்கு ஸ்கூட்டி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தங்கியிருந்த 75 நாட்களில் என்ன நடந்தது என்பது பற்றிய யூகங்களுக்கு பஞ்சமேயில்லை. காரணம் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. இந்த முடிவை யார் எடுத்தார் என்பதற்கு இன்று வரையில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை. ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க, ஒரு நபர் கமிஷனை மாநில அரசு அமைத்திருக்கிறது. இந்த கமிஷனால் ஏதாவது பலன் கிடைக்குமா என்று உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.

    வரலாறு என்ன சொல்லும்

    வரலாறு என்ன சொல்லும்

    தன்னுடைய வாழ்க்கையில், நடிகையாக இருந்த காலந்தொட்டு, அரசியல் வாதியாக மாறி, தமிழகத்தை ஆண்ட போதும், மாண்ட போதும், எப்போதுமே, எல்லாமுமே, என்றைக்குமே ஜெய லலிதா வாழ்வில் மர்மமானதாகவே இருந்திருக்கிறது. வரலாறு ஈவு, இரக்கம் இல்லாமல் எல்லோரையும் எடை போடுவது போலவே ஜெயலலிதாவையும் எடை போடும்.. பார்க்கலாம்.. ஜெயலலிதா குறித்து வரலாறு என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது என்பதை.

    English summary
    History will give its verdict on the legends brutally. We will wait and see the verdict on late Jayalalitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X