For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்து வட்டிக் கொடுமை.. என்ன செய்யப் போகிறோம்?

Google Oneindia Tamil News

சென்னை: கந்து வட்டி கொடுமையால் கஞ்சி குடிப்பவர்களின் உயிர் தானே போனது என்று அலட்சியமாக ஏளனமாக இருந்துவிட்டோம். இன்று அதே கந்து வட்டி கலை துறையினரின் உயிரையும் காவு வாங்கி விட்டதே என்ன செய்ய போகிறோம்.

கஞ்சி குடிப்பவரை இழந்தாலும் அவர் குடும்பமும் பாதிக்கும், கலை துறையினரை இழந்தாலும் அவர் குடும்பமும் பாதிக்கும். கஞ்சி குடிப்பவர்களின் உயிரோ கலை துறையினரின் உயிரோ இரண்டுமே விலைமதிப்பற்றது தான் என்பதை இனியாவது உணர்வோமா.

What will end this Usury issue ?

கந்து வட்டி கொடுமை மட்டுமல்ல நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைகளையுமே கண்டு கொள்ளாமல் எனக்கென்ன என் குடும்பம் எதிலும் பாதிக்கப்படவில்லை யாருக்கோ தானே பாதிப்பு எங்கோ தானே பாதிப்பு என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கும் வரையில் இந்த எண்ணத்தை மாற்றிகொள்ளும் வரையில் எதுவுமே மாறாது.

அதான் அரசாங்கம் இருக்கிறதே தவறு செய்தவர்களை அரசாங்கம் தண்டிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் மாநிலத்தில் இருக்க கூடிய அரசோ மயக்கத்தில் மந்த நிலையில் மதியிழந்து இருக்கிறது. மத்தியில் இருக்கும் அரசோ தவறு செய்தவர்களை தண்டிக்காமல் ரெய்டு மேல் ரெய்டு நடத்தி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்று நினைக்கும் அளவிற்கு கொண்டு சென்று பயமுறுத்தி பணிய வைக்க பார்க்கிறது.

இனியும் மக்கள் யாருக்கோ தானே பிரச்சனை எங்கேயோ தானே பிரச்சனை என்று இருந்தால் இது போல உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

மக்களை காக்கும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் நல்ல நிர்வாக திறமையுள்ள ஆட்சியாளர்களை ஓட்டுக்கு பணம் வாங்காமல் தேர்ந்தெடுக்க முயற்சி செய்யுங்கள். கட்டாயம் தவறுகள் குறையும் இது போன்ற உயிர் பலிகளும் குறையும்.

என். குருமூர்த்தி
தலைமைக் கழக செயலாளர்
அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சி

English summary
The menace of Usury is raising its head in the State with the death of film producer Ashok Kumar due to the pressure from financier Anbu Chezhiyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X