• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மோடி, ராகுல் காந்தி, ஸ்டாலின்... அரசியல் தலைவர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?

By Veera Kumar
|
  சனி பெயர்ச்சி..எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?- வீடியோ

  சென்னை: ஆயுள்காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் சனிபகவான், இன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். சனீஸ்வரபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசிகளில் இடம் பெயருவது வழக்கம்.

  மிக முக்கியமான கிரகம் என ஜோதிட சாஸ்திரம் வரையறுத்து சொல்வதால் சனீஸ்வரர் பெயர்ச்சியின்போது மக்கள் தங்கள் ஜாதகங்களை எடுத்து பார்த்துக்கொள்வது வழக்கம்.

  சாமானிய மக்களே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதிகாரம், பணம், பதவி சுகம் அனுபவித்துள்ள அரசியல் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பார்களா. மேலும், இவர்கள் எப்படி செயல்படுகிறார்களோ அப்படித்தான் மக்கள் எதிர்காலம் அமையப்போகிறது என்பதால், அரசியல் தலைவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எந்த மாதிரி ஏற்ற, இறக்கங்களை கொடுக்கப்போகிறது என்பது குறித்து பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்த ஒரு பார்வை.

  மோடி ராசி

  மோடி ராசி

  பிரதமர் மோடியின் ராசி, செவ்வாய் அதிபதியாக உள்ள விருச்சிகமாகும். அவருக்கு ஏழரை சனியின் ஆதிக்கம் இன்னும் தொடருகிறது. ஆனால் இப்போது, பொங்கு சனியாக, இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார் சனி பகவான். உடல் நலனில் சிறு பாதிப்பை ஏற்படுத்தினாலும், தற்போதுள்ள நிலையில், மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார் என்பது நிம்மதி தரும் சேதி. அதே நேரம், ராகு, கேது தைரியத்தையும், வெற்றியையும் அதிகரிப்பார்கள். நாட்டில் ஒரு சில பிரச்னைகள் எழுந்தாலும், அதை சமாளித்து நல்ல பெயரை ஈட்டுவார்.

  சனி பகவான் இரண்டாம் வீட்டில் நுழைவதால், சோர்வு, சலிப்பு நீங்கி, உற்சாகம் அடைவார். முகத்தில் புன்னகை மிளிரும்.

  வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் பலவீனமடைவார்கள்.

  ராகுல் காந்தி ராசி

  ராகுல் காந்தி ராசி

  பிரதமர் மோடி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவரான ராகுல் காந்தியும், விருச்சிக ராசிக்காரர்தான். நட்சத்திரம்தான் இருவருக்கும் வேறு, வேறு ஆகும். ராகுல் காந்தியின், ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு, சனி பகவான் பெயர்ச்சியடைந்துள்ளதால், சொந்த கட்சியில் செல்வாக்கு உண்டாகும். பாதுகாப்பு விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டுமாம். அரசியலில், புதுமையான விஷயங்களை உருவாக்க, சனி பகவான் துணை புரிவார். குரு பார்வையும், பரிபூரணமாக அமைந்து உள்ளது. ஏழரை சனி தொடர்ந்தாலும், அதனால் சிரமங்கள் இருந்தாலும், வெற்றிகள் உண்டு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

  ஸ்டாலின் ராசி

  ஸ்டாலின் ராசி

  ஸ்டாலின் ராசிக்கு, சனியின் பார்வை ஏழாம் இடத்தில் பதிகிறது. இதனால் அவரை சேர்ந்தவர்களே, அவருக்கு எதிரியாகும் சூழல் உருவாகலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாபம் வருவது போல் தெரிந்தாலும், எதிர்பார்த்த செயலை முடிக்க முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. சனியின் பார்வை இரண்டாமிடத்தில் பதிவதால், குடும்பத்தினர் குழப்பங்களுக்கு காரணமாக அமையலாம். பெரிய நன்மை எதையும் இப்போதைக்கு இவர் எதிர்பார்க்க முடியாது. ஆனால், சிறு சிறு சங்கடங்கள் இப்போதைக்கு தோன்றினாலும், பிற்பகுதி நற்பலன்களையே அளிக்கும் என்பது சிறப்பு. அரசியல் வாழ்க்கை சில காலம் கழித்து ஏற்றம் தர வாய்ப்பு உள்ளது. ஸ்டாலின் சிம்மராசிக்காரர். நட்சத்திரம் பூரம். சிம்மராசிக்காரர்கள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள, பெருந்தேவி தாயாரை, செவ்வாய்கிழமை வழிபட்டால், நற்பலன்களை அடையலாம்.

  தமிழிசை சவுந்தரராஜன்

  தமிழிசை சவுந்தரராஜன்

  தனுசு ராசிக்காரரான தமிழிசை, சனி பிரீதிசாந்தி பூஜைகள் செய்வது நலம். ஏனெனில் இப்போது தமிழிசை ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது என்பதால், எச்சரிக்கையுடன் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும். சனிப்பெயர்ச்சி காலகட்டத்தை குழப்பமாகவே எதிர்நோக்க வேண்டிஇருக்கும். பிரச்னைகள் எந்த ரூபத்தில், எப்படி வேண்டுமானாலும் வரும் என்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை.

  விஜயகாந்த்

  விஜயகாந்த்

  ஏழரை சனியிலிருந்து, முழுமையாக விடுபெறுகிறார் விஜயகாந்த். மூன்றாம் இடத்திற்கு செல்லும் சனியால், தைரியம், செல்வாக்கு கூடும். அரசியல் கூட்டணியில், முக்கிய பங்கு வகிப்பார். சனி பகவான், தற்போது யோக சனியாக, ராசிக்கு மூன்றாம் இடமான, தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளதால் சனி பகவான் வலுவாக காணப்படுகிறார். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். சவாலான காரியங்களை கூட செய்து காண்பிப்பார். எங்கு சென்றாலும் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். இனி, இவருக்கு வெற்றி உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

   
   
   
  English summary
  What will get the political leaders in this Sani Peyarchi? here is the details.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X