For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணல் குவாரிகளுக்கு தடை.. தமிழ்நாட்டில் இனி நடக்க போவது என்ன? #sandquarry

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும்படி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!- வீடியோ

    சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும்படி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. கட்டுமான துறை தொடங்கி நீர்நிலைகள் வரை தமிழ்நாட்டில் பல முக்கிய அதிர்வலைகளை இந்த தீர்ப்பு ஏற்படுத்தும்.

    மேலும் இது தமிழ்நாட்டை மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நதிகளின் நிலைமை

    நதிகளின் நிலைமை

    இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளுக்கு முக்கிய விடுதலை ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளது. பொதுவாக தண்ணீர் இல்லாத காலங்களில் மொத்தமாக ஆறுகளில் உள்ள மணல்கள் சூறையாடப்படும். இதனால் ஆறுகளில் தண்ணீர் வரும் போது அது உடனடியாக கடலுக்கு செல்வதும், ஆவி ஆவதும், தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையும் இருந்தது. தற்போது இதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

    கட்டுமானம்

    கட்டுமானம்

    இந்த அறிவிப்பு அதிகம் பாதிக்கப் போவது தமிழ்நாடு கட்டுமான துறையைதான். பல இடங்களில் தற்போதுதான் புதிதாக வீடுகளும், நிறுவனங்களும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கும் இந்த சமயத்தில் வந்துள்ள தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    ரியல் எஸ்டேட் காலி

    ரியல் எஸ்டேட் காலி

    கட்டுமான துறை படுப்பதால் கண்டிப்பாக ரியல் எஸ்டேட் துறையும் காலியாகும். இதன்காரணமாக விவாசாய நிலங்கள் வீட்டு மனையாக மாறுவது வெகுவாக குறையும். எல்லோரும் ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கும் டிரெண்ட் மொத்தமாக முடிவுக்கு வரும். முக்கியமாக நெடுஞசாலையில் வளர்ச்சி அடியோடு குறையும்.

    திருட்டு

    திருட்டு

    இந்த நிலையில் இந்த மணல் தடை தற்போது புதிய பிரச்சனையை ஒன்றை ஏற்படுத்தும். ஏற்கனவே கேரளாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து மணல் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இரண்டு மாநில தேவையை தீர்க்க இனி நிறைய மணல் கொள்ளைகள் நடக்க ஆரம்பிக்கும். ஏற்கனவே பெரிய லாபியாக இருக்கும் மணலை மாபியாக்கள் இன்னும் பெரிய அளவில் மறைமுகமாக விஸ்வரூபம் எடுக்கும்.

    சென்னையும் பாதிக்கும்

    சென்னையும் பாதிக்கும்

    மேலும் இந்த நடவடிக்கையால் சென்னை மிக முக்கியமாக பாதிக்கும். சென்னையில் நடக்கும் மெட்ரோ பணிகள், சாலையில் குழி தோண்டி செய்யப்படும் ''அறுவை சிகிச்சைகள்'' அனைத்தும் தமிழக உள்மாவட்ட மணலை நம்பித்தான் நடக்கிறது. இதனால் ஏற்கனவே சென்னையில் மெதுவாக நடக்கும் கட்டுமான பணிகள் அனைத்தும் மொத்தமாக முடங்கும்.

    விலை

    விலை

    இனி புதிதாக காட்டப்படும் லெக் வியூ அப்பார்ட்மெண்ட்கள், 10 மாடி கட்டிடங்களின் விலை அதிகம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இனி புதிய வீடு காட்டுவதும், புதிய வீடு வாங்குவதும் சாதாரண விஷயமாக இருக்காது. ஆறுகளின் ஆன்மாவை திருடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய சம்மட்டியடியாக இருக்கும்.

    English summary
    HC has banned all sand mining quarries in Tamilnadu. It will affect construction, real estate and many other industries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X