For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜியோ ஃபோனில் எத்தனை சிம் போடலாம் தெரியுமா?

ஜியோ ஃபோன் கட்டணமில்லாமல் வைப்புத் தொகை செலுத்தியே வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஜியோ ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள இன்பில்ட் வசதிகள் என்னென்ன என்பதை உங்களுக்காக பட்டியலிடுகிறோம்.

ஜியோ ஃபோன் 1.2ஜிகாஹெட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் முறையில் வடிவமைக்கப்படுகிறது, மேலும் 512 மெகாபைட் ரேம் வசதியும் உள்ளடக்கியிருக்குமாம். 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருந்தாலும் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி விரிவாக்கம் செய்யும் வசதி பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 What you want to know about inbuilt features of jio phone? Here are the answers

2 மெகாபிக்சல் ரியர் கேமராவும், செல்ஃபி எடுக்கும் வசதிக்காக 0.3 மெகாபிக்சல் முகப்பு கேமராவும் இடம்பெற்றிருக்கும். ஜியோஃபோனில் 2000mAh போனுடன் சேர்த்தே பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்(அதாவதுபேட்டரியை வெளியில் எடுக்க முடியாது, பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் ஃபோன்கள் அப்படியே வருகின்றன).

கருப்பு நிறத்தில் மட்டும் ஜியோ ஃபோன் கிடைக்கும் என்று தெரிகிறது, சாதாராண சிம் மற்றும் நேனோ சிம் என இரண்டு வகை சிம்களை இதில் பயன்படுத்தலாம். ப்ளூடூத், வொய்ஃபை,எப்ஃஎம், 4ஜி சேவையை பயன்படுத்த முடியும். 2.40 இன்ச் டிஸ்பிளே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடுதிரை வசதி இல்லாத இந்த ஃபோனில் 24 இந்திய மொழிகளை பயன்படுத்த முடியும் என்றும் அறிமுக விழாவின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Phone is an upcoming mobile by Jio. The phone is expected to be powered by 1.2GHz dual-core processor and come with 512MB of RAM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X