திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்.. புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆஃப் எண்
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க வாட்ஸ் ஆஃப் எண்ணை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேல் உயிரிழந்த காரணத்தால் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, தேர்தல் ரத்தான இரண்டு தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க வாட்ஸ் ஆஃப் எண்ணை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெறுவதால், பொதுமக்கள் பணத்தை வெளியே எடுத்துச் செல்லும் போது அதற்கான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளாகள் தங்கள் பகுதியில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க கட்டணமில்லா அழைப்பு எண் 18004253340 வும் வாட்ஸ் ஆஃப்பில் புகார் தெரிவிக்க 8903003451 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். பதட்டமான வாக்குசாவடிகளாக 43 வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுதப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications