For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சிட்டி'சன்களே, இனிமே யாராவது கிராமத்துக்காரங்கள கிண்டல் பண்ணுவீங்க..

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை:கிராமம் மற்றும் நகரத்துக்கிடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நகர மக்கள் கிராமத்தவர்களை ஏளனமாக பார்ப்பதையும், அவர்களை கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் அத்தனை கிராமத்திய பழக்கவழக்கங்களையும் காப்பியடித்து அதி்ல் சற்று உப்பு மிளகாய், கரமசாலா தூவி, அதை நாகரீகம் என்று நகர மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல சொல்கிறது. இதோ அந்த மெசேஜ்.

Whatsapp message explain the diffierene between village and city culture

கிராமமும் நகரமும் ....

வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான்

பீடா போட்டால் நகரத்தான்

பச்சை குத்தினால் கிராமத்தான்

டாட்டூ போட்டு கொண்டால் நகரம்

மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்

மெஹந்தி என்றால் நகரம்

மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்

கெமிக்கல் பொடி தூவினால் நகரம்

90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்

2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்

மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம்

மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்

தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்

மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்

கிழிந்த ஆடை போட்டால் கிராமம்

நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்

உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்

உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்

கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்

இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..

எது நாகரீகம் எது ஆரோக்கியம்...

விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

English summary
A whatsapp message explain the diffierene between village and city culture, which are looking same in many things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X