For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது... ஜனவரி 1ல் இருந்து அமலுக்கு வருகிறது!

ஜனவரி 1ல் இருந்து இருந்து சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஜனவரி 1ல் இருந்து இருந்து சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாட்ஸ் அப் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் தொடங்கி விண்டோஸ் போன் வரை பல போன்களில் எப்போது வாட்ஸ் ஆப் செயல் இழக்கும் என்றும் இந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. மொபைல் மாடல்கள் பல இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

ஏன் இந்த திடீர் முடிவு என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது தளத்தில் தெரிவித்துள்ளது.

வேலை செய்யாது

வேலை செய்யாது

வாட்ஸ் ஆப்பில் சமீப காலமாக நிறைய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனாலும் இந்த அப்டேட்கள் சில மொபைல் மாடல்களில் சரியாக வேலை செய்வதில்லை. இந்த நிலையில் தற்போது சில பழைய மாடல் மொபைல்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் பழைய மாடல்களில் அப்டேட்களும் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

எந்த மாடல்

எந்த மாடல்

ஜனவரி 1ல் இருந்த இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. அதன்படி பிளாக்பெரி 10 மற்றும் அதற்கும் முந்தைய பிளாக்பெரி போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது. அதேபோல் விண்டோஸ் 8.0 போனிலும் அதற்கு முன்பு இருக்கும் விண்டோஸ் மாடல் போன்களிலும் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது.

நோக்கியா

நோக்கியா

நோக்கியா சிம்பியன் எஸ்60 மாடல் மொபைலில் கடந்த ஜூன் 30 அன்று வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் பல மாடல்களில் அப்டேட் நிறுத்தப்பட்டது. அதேபோல் நோக்கியா எஸ்40 மாடல் மொபைல்கள் 2018 டிசம்பர் 31ல் இருந்து வேலை செய்யாது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இந்த போன்களில் வாட்ஸ் ஆப் மெதுவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் அறிவிப்பு

ஆண்ட்ராய்ட் அறிவிப்பு

அதேபோல் ஆண்ட்ராய்ட் மாடலான 2.3.7 அல்லது 'ஜிஞ்சர் பிரெட்' போன்ற மாடல்களில் 2020 பிப்ரவரி 1ல் இருந்து வாட்ஸ் ஆப் வேலை செய்யாது. ஏற்கனவே விண்டோஸ் 7, ஆண்ட்ராய்ட் 2.1, ஆண்ட்ராய்ட் 2.2, ஐ.ஓ.எஸ் 6 போன்ற மாடல்களில் 2016லேயே அப்டேட்கள் நிறுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மாடல் வைத்து இருப்பவர்கள் வாட்ஸ் ஆப் உபயோகிக்க வேண்டும் என்றால் புதிய போன் வாங்க வேண்டும்.

English summary
WhatsApp will not work on BlackBerry OS, BlackBerry 10, and Windows Phone 8.0 from this year end. It also applicable to some other old operating systems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X