For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆச்சி, எப்படி ஆச்சி ஆயிரம் படத்தில் நடித்தீர்கள்: மனோரமாவை கேட்ட அப்துல் கலாம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரை சந்திக்க சென்ற மனோரமாவை பார்த்து எப்படி ஆச்சி ஆயிரம் படத்தில் நடித்தீர்கள் என்று அவர் ஆச்சரியமாக கேட்டதாக நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

நாடக நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்த மனோரமா ஆச்சி தனது 78வது வயதில் மரணம் அடைந்தார். அவரது இழப்பு திரை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். மனோரமாவின் மறைவு செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மனோரமா பற்றி நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறுகையில்,

கலாம்

கலாம்

நான் மனரோமா ஆச்சியுடன் சேர்ந்து டெல்லி சென்றேன். அப்போது நாங்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்க குடியரசுத் தலைவர் மாளிக்கைக்கு சென்றோம்.

ஆச்சி

ஆச்சி

எங்களை சந்தித்த அப்துல் கலாம் எங்களின் பெயர்களை எல்லாம் கேட்டறிந்தார். ஆனால் மனோரமாவை பார்த்த அவர் ஆச்சி, ஆச்சி என்று சப்தமாக அன்போடு அழைத்தார். எப்படி ஆச்சி ஆயிரம் படங்களில் நடித்தீர்கள் என்று அவர் ஆச்சியிடம் ஆச்சரியமாக கேட்டார்.

வெள்ளைக்காரன்

வெள்ளைக்காரன்

நானும், சிலரும் மனோரமாவுடன் சேர்ந்து லண்டன் சென்றோம். விமானத்தில் ஆச்சியின் அருகில் வெள்ளைக்காரர் ஒருவர் அமர்திருந்தார். அப்போது ஆச்சி தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தார். அதை கேட்ட வெள்ளைக்காரர் விமான சிப்பந்திகளிடம் ஆச்சி பற்றி புகார் தெரிவித்தார்.

நடிகை

நடிகை

ஆச்சி தமிழக்தில் பெரிய நடிகை, அவர் பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த பாடகி என்று விமான சிப்பந்திகள் வெள்ளைக்காரரிடம் எடுத்துக் கூறினர். அதன் பிறகு அவர் ஆச்சியை பெருமிதம் பொங்க பார்த்தார்.

அம்மா

அம்மா

மனோரமா பார்க்க என் அம்மாவை போன்றே இருந்தார். என் தாய்க்கும் அவரைப் போன்று முகத்தில் மச்சம் உண்டு. என்னை பாசத்துடன் மயிலு, மயிலு என்று அழைத்தவர் மனோரமா. அவர் எனக்கு தாய் போன்றவர் என்றார் மயில்சாமி.

English summary
Actor Mayilsamy told that former president Abdul Kalam asked Manorama achi how did she manage to act in 1000 films.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X